வீட்டுக்கு 2 மூனு ஆர்டர்.. வெறும் ரூ.9,965 பட்ஜெட்ல QLED டிவி.. டால்பி ஆடியோ.. 8 ஜிபி ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு கிடைக்கும் மூன்று 32 இன்ச் டிவிகளை (32 inch TVs) இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் மோட்டோரோலா, இன்பினிக்ஸ், ஐஃபால்கான் போன்ற பிராண்ட் டிவி மாடல்கள் இருக்கின்றன. இந்திய மார்கெட்டில் 32 இன்ச் டிவி வாங்க வேண்டுமானால், இந்த மூன்று மாடல்களை தவிர்க்க முடியாது.
ஐஃபால்கான் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (iFFALCON 32 inch HD Ready LED Smart Google TV): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 64 பிட் குவாட் கோர் சிப்செட் கிடைக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 32 இன்ச் எல்இடி டிஸ்பிளே, 220 நிட்ஸ் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. 16W சவுண்ட் அவுட்புட் கொண்ட டால்பி ஆடியோ (Dolby Audio) ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. வை-பை, ப்ளூடூத், 2 எச்டிஎம்ஐ மற்றும் 1 யுஎஸ்பி போர்ட் கிடைக்கிறது. 54 சதவீத தள்ளுபடி போக ரூ.8,999 பட்ஜட்டில் பிளிர்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி போக ரூ,7,999 விலைக்கு வருகிறது.
இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Infinix 32 inch HD Ready LED Smart Linux TV): குவாட் கோர் (Quad Core) சிப்செட் மற்றும் லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) கிடைக்கிறது. 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. 32 இன்ச் எல்இடி டிஸ்பிளே, 250 நிட்ஸ் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
எச்டி ரெசொலூஷன் கிடைக்கிறது. 16W சவுண்ட் அவுட்புட் உள்ளன. 2 எச்டிஎம்ஐ, 1 யுஎஸ்பி, வை-பை மற்றும் ப்ளூடூத் கிடைக்கிறது. 54 சதவீத தள்ளுபடி போக ரூ.7,749 விலைக்கு பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது. குறிப்பிட்ட கார்டுகளுக்கு ரூ.388 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,361 பட்ஜெட்டில் இந்த 32 இன்ச் டிவியை வாங்கி கொள்ளலாம்.

மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA 32 inch QLED HD Ready Smart Google TV): கூகுள் டிவி ஓஎஸ், டால்பி ஆடியோ, 20W ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்களை இது கொடுக்கிறது. எச்டிஆர்10 மட்டுமல்லாமல், 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுக்கிறது. கியூஎல்இடி டெக்னாலஜியுடன் 32 இன்ச் எல்இடி டிஸ்பிளே உள்ளது.
இந்த டிஸ்பிளேவி்ல் 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் குவாட் கோர் மீடியாடெக் (Quad Core Mediatek) சிப்செட் கொடுக்கிறது. ஸ்கிரீன் மிரரிங், வை-பை ப்ளூடூத் போன்ற பீச்சர்களும் இருக்கின்றன. மேலும், பில்ட் இன் கிராபிக்ஸ் யூனிட் கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் உள்ளன.
2 யுஎஸ்பி போர்ட்கள் கிடைக்கின்றன. இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவியின் விலை 59 சதவீத தள்ளுபடி போக ரூ.10,490ஆக இருக்கிறது. இருப்பினும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.525 கூடுதல் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,965 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








