சுட்டெரிக்கும் வெயில்.. கவலை வேண்டாம்.. ஆஃபரில் கிடைக்கும் 3 பிராண்டட் ஏர் கூலர்கள்.. எந்தெந்த மாடல்?
தற்போது கோடை காலத்தின் தொடக்கத்தில் தான் இருக்கிறோம். இனி நாளுக்கு நாள் வெப்பநிலை இதை விட உயரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது என்பது தான் உண்மை.
குறிப்பாக மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. இந்த கடுமையான வெயிலை சமாளிக்க ஏசி, எர் கூலர்கள் போன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் இந்தியாவில் தற்போது பிராண்டட் ஏர் கூலர் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் மூன்று பிராண்டட் ஏர் கூலர்கள் ( branded air coolers) மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹாவெல்ஸ் Celia 55எல் ஏர் கூலர் (Havells Celia 55L Air Cooler) மாடலுக்கு அமேசான் தளத்தில் 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,989 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.
எனவே இந்த ஹாவெல்ஸ் Celia 55எல் ஏர் கூலர் மாடலை ரூ.8,989 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக 55 லிட்டர் கொண்ட இந்த ஹாவெல்ஸ் Celia 55எல் ஏர் கூலர் ஆனது உங்கள் வெயில் காலத்தை எளிதாகக் கடக்க உதவும். மேலும் 3500 m3/hஏர் டெலிவரி, 4 லீப் அலுமினியம் பிளேடு ஃபேன், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹாவெல்ஸ் ஏர் கூலர் மாடல்.

சிம்பொனி சியஸ்டா 95 எக்ஸ்எல் ஏர் கூலர் (Symphony Siesta 95 XL Air Cooler) மாடலுக்கு அமேசான் தளத்தில் 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,991 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலரை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிம்பொனி சியஸ்டா 95 எக்ஸ்எல் ஏர் கூலர் மாடலை நீங்கள் ரூ.8991 விலையில் வாங்க முடியும். குறிப்பாக 95 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது. ம் சிம்பொனி சியஸ்டா 95 எக்ஸ்எல் ஏர் கூலர். மேலும் i-Pure Technology ஐ பயன்படுத்துகிறது இந்த சிம்பொனி ஏர் கூலர். அதேபோல் இந்த ஏர் கூலர் 150 வாட்ஸ் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.
ஆட்டோ-ஸ்விங் (auto-swing) வசதியுடன் சிம்பொனி ஏர் கூலர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு 1 வருடம் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களுடன் இந்த ஏர் கூலர் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
வி-கார்டு அரிடோ டி75எச்-என் டெசர்ட் ஏர் கூலர் (V-Guard Arido D75H-N Desert Air Cooler) மாடலுக்கு அமேசான் தளத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஏர்கூலர் மாடல் ரூ.10,919 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.

எனவே வி-கார்டு அரிடோ டி75எச்-என் டெசர்ட் ஏர் கூலர் மாடலை ரூ.8919 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக இந்த ஏர் கூலர் 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 75 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது இந்த அசத்தலான ஏர் கூலர். பின்பு இதன் வடிவமைப்பும் அருமையாக உள்ளது.
அதேபோல் 4250 m3/h ஏர் டெலிவரி, மெட்டல் ஃபேன் பிளேடு, ஐஸ் சேம்பர், 3-பின் பவர் கார்டு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது வி-கார்டு ஏர் கூலர். மேலும் இது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் ஆகும்.


Click it and Unblock the Notifications








