பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி.!

|

பட்ஜெட் விலையல் தெறிக்கவிடும் வகையில் தாம்சன் நிறுவனம் புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி.!

இந்த டிவி 40 இன்ச் அளவில் கிடைக்கும் புதிய 4 கே தரத்தில் வெளியே வந்துள்ளது. டிவி மார்ச் 16ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றது.

இதனால் பொது மக்கள் அலாதியான குஷியில் இருக்கின்றனர்.

 தாம்சன் நிறுவனம்:

தாம்சன் நிறுவனம்:

தாம்சம் நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் முதல் 4 கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்கின்றது. இதில் ஏராளமான தொழில்நுட்பங்களும் இருக்கின்றது. சந்தையில் பிரபலமாக அறியப்படுகின்றது.

 40 இன்ச்  ஸ்மார்ட் டிவி:

40 இன்ச் ஸ்மார்ட் டிவி:

தாம்சம் நிறுவனத்தின் 40 இன்ச் 4 கே டிவியை (3840 x2160 பிக்சல்) முதல் ஸ்மார்ட் டிவியாகும். இது யுடி9 என அழைக்கப்படுகிறது. 20 வோல்ட் ஆடியோ அவுட்புட் வழங்குகிறது.

எல்இடி டிவி:

எல்இடி டிவி:

புதிய மூன்று ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் மற்றும் 60 ஹேர்ட்ஸ் ஸ்டான்டர்டு ரிப்ரேஷ் ரேட் கொண்டிருக்கின்றது.

6 செயலிகள் ப்ரீ இன்டஸ்டால்:

6 செயலிகள் ப்ரீ இன்டஸ்டால்:

ஸ்மார்ட் டி.வி. அம்சத்திற்கென 6செயலிகல் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் யூடியூப் செயலியும் அடங்கும். இந்த செயலியை கொண்டு 4K வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த டி.வி.யின் பிரைட்னஸ் ரேட்டிங் 550 நிட்ஸ் ஆகும். கூடுதலாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவையும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.

தாம்சன் டிவியின் மாடல்கள்:

தாம்சன் டிவியின் மாடல்கள்:

புதிய தாம்சன் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. ஏற்கனவே தாம்சன் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் வேரியண்ட்களை தாம்சன் விற்பனை செய்து வருகிறது. புதிய தாம்சன் யு.டி.9 4K ஸ்மார்ட் டி.வி. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் விலை:

பட்ஜெட் விலை:

இதன் விலை இந்தியாவில் ரூ.20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப்-எண்ட் டி.வியின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தாம்சன் டி.வி.க்களை விற்பனை செய்து வரும் எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் 1990 முதல் சந்தையில் பல்வேறு ரக டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Thomson UD9 40 Inch 4K Smart TV Launched in India : Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X