தாம்சன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு ரூ.10,000- வரை விலைகுறைப்பு.!
தாம்சன் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொதுவாக சாம்சங் எல்டி பேக்லைட் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது.
தற்சமயம் பிளிப்கார்ட் வலைதளத்தில் தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 32-இன்ச், 43-இன்ச,40-இன்ச், 43-இன்ச் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை வரும் ஏப்ரல் 21-ம் தேதி 12மணி அளவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அன்மையில் இந்நிறுவனம் UD9 40-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலுக்கும் விலைகுறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி:
தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை எல்ஜி ஐபிஎஸ் பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் எச்டிஆர் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி: செயலி:
இந்த ஸ்மார்ட் டிவியில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி-டி720ஜிபியூ ஆதரவு மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099):
தாம்சன் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொதுவாக சாம்சங் எல்டி பேக்லைட் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

விலைகுறைப்பு:
மேலே குறிப்பிட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கும் ரூ.8000 முதல் 10,000-வரை விலைகுறைக்கப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications