இறங்கி அடித்த Thomson.. ரூ.6,799 பட்ஜெட்ல QLED டிவி.. 36W ஸ்பீக்கர்கள்.. லினக்ஸ் OS.. எந்த மாடல்?
தாம்சன் (Thomson) நிறுவனம் இந்தியாவில் புதிய கியூஎல்இடி டிவி (QLED TV) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 24 இன்ச், 32 இன்ச், 40 இன்ச் என மூன்று அளவுகளில் இந்த தாம்சன் டிவிகள் வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய தாம்சன் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தாம்சன் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Thomson QLED TVs specifications): இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 24 இன்ச், 32 இன்ச், 40 இன்ச் டிவிகள் விஏ பேனல் (VA panels) மற்றும் 1.1 பில்லியன் நிறம் (1.1 billion colours) ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

லினக்ஸ் Coolita 3.0 ஒஎஸ் (Linux Coolita 3.0 OS) மூலம் இந்த புதிய தாம்சன் கியூஎல்இடி டிவிகள் இயங்குகின்றன. குறிப்பாக இந்த ஓஎஸ் மேம்பட்ட பல புதிய அம்சங்களை வழங்கும். அதேபோல் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), சோனி லிவ் (Sony Liv) மற்றும் ஜீ5 (Zee5) போன்ற பிரபலமான OTT ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.
வைஃபை உடன் மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட், வாய்ஸ் சர்ச் (voice search), லைவ் டிவி சேனல்கள் (live channels), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த தாம்சன் கியூஎல்இடி 24 இன்ச், 32 இன்ச் மற்றும் 40 இன்ச் டிவிகளில் உள்ளன.
குறிப்பாக தாம்சன் அறிமுகம் செய்த 24-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 24W சவுண்ட் அவுட்புட் வழங்கும். மேலும் 32 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்கள் 36W சவுண்ட் அவுட்புட் வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சரவுண்ட் சவுண்டுடன் (surround sound) கூடிய பாட்டம்-ஃபயரிங் ஸ்பீக்கர்களை ( bottom-firing speakers) கொண்டுள்ளன இந்த மூன்று டிவிகள்.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் தாம்சன் கியூஎல்இடி டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. V35*4 பிராசஸர் (A35*4 processor) உடன் தாம்சன் கியூஎல்இடி டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்சன் கியூஎல்இடி டிவி 24 இன்ச் மாடலின் விலை ரூ.6,799-ஆக உள்ளது. பின்பு இதன் 32 இன்ச் டிவி மாடலை ரூ.8,999 விலையிலும், இதன் 40 இன்ச் டிவி மாடலை ரூ.12,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய தாம்சன் கியூஎல்இடி டிவி மாடல்கள் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்சன் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த டிவி மாடல்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








