Thomson அறிமுகம் செய்த புதிய 4K டிவிகள்.. 16ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்? என்ன விலை?
தாம்சன் நிறுவனம் புதிய Phoenix சீரிஸ் கியூஎல்இடி டிவி (Thomson Phoenix series QLED TV) மாடல்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த சீரிஸ் 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் என மூன்று அளவுகளில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகள் பட்ஜெட் விலையில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய தாம்சன் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
தாம்சன் Phoenix சீரிஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Thomson Phoenix series QLED TV Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கியூஎல்இடி 4கே ஐபிஎஸ் டிஸ்பிளே (QLED 4K IPS displays) உடன் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 1 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 (HDR10) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஏஆர்எம் கார்டெக்ஸ் V55*4 பிராசஸர் உடன் தாம்சன் Phoenix சீரிஸ் கியூஎல்இடி டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் மாலி ஜி312 ஜிபியு (Mali G312 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தாம்சன் Phoenix சீரிஸ் கியூஎல்இடி டிவி மாடல்கள். எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் விவிட் (Vivid), ஸ்டான்டர்ட் (Standard), ஸ்போர்ட் (Sport), மூவி (Movie), கேம் (Game) உள்ளிட்ட பல்வேறு பிக்சர் மோட்கள் இந்த புதிய தாம்சன் டிவிகளில் உள்ளன.
50 இன்ச் தாம்சன் Phoenix சீரிஸ் கியூஎல்இடி டிவி ஆனது 50W டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் வெளிவந்துள்ளது. பின்பு இதன் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்கள் 60W நான்கு ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்டுள்ளன. அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் ட்ரூசரவுண்ட் சவுண்ட் (TruSurround sound) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களும் இந்த டிவிகளின் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த அடியோ அனுபவத்தை வழங்கும்.
ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை (Android TV operating system) அடிப்படையாக கொண்டு இந்த தாம்சன் Phoenix சீரிஸ் கியூஎல்இடி டிவி வெளிவந்துள்ளன. மேலும் 10,000-க்கும் அதிகமான ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) போன்ற முக்கியமான ஓடிடி ஆப்களையும் இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.
கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant), க்ரோம்காஸ்ட் (chromecast) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். டூயல் பேண்ட் வைஃபை, ப்ளுடூத் 5.0, ஏர்பிளே சப்போர்ட், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த தாம்சன் Phoenix சீரிஸ் கியூஎல்இடி டிவிகளில் உள்ளன.
குறிப்பாக 50 இன்ச் கொண்ட தாம்சன் Phoenix சீரிஸ் கியூஎல்இடி டிவியின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. பின்பு இதன் 55 இன்ச் மாடலை ரூ.30,999 விலையிலும், 65 இன்ச் மாடலை ரூ.43,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் மே 1 அல்லது 2-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த டிவிகள் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








