டிவி வாங்கலையோ டிவி.. QLED 4கே டிவியை கம்மி விலையில் தரும் பிளிப்கார்ட்.. எந்த மாடல்?
தாம்சன் (Thomson) நிறுவனத்தின் 43-இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவிக்கு தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தான் தாம்சன் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டது.
அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Thomson Phoenix QLED Ultra HD (4K) Smart Google TV) ஆனது தற்போது 37 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. அதாவது இந்த டிவி முன்பு ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த தாம்சன் டிவியை ரூ.19,999 விலையில் வாங்கலாம்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1750 வரை தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி 4கே டிவி ஆனது 3840 × 2160 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.
குவாண்டம் எல்இடி (கியூஎல்இடி) டெக்னாலஜி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தாம்சன் ஸ்மார்ட் டிவி. பின்பு மீடியாடடெக் எம்டி9602 (MT9602) பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதபோல் கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி 4கே டிவி மாடல். மேலும் மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.
கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி 4கே டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த தாம்சன் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

டால்பி அட்மாஸ்(Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) உள்ளிட்ட ஆடியோ ஆதரவுடன் 40 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி 4கே டிவி. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது தாம்சன் Phoenix 43-இன்ச் கியூஎல்இடி 4கே டிவி மாடல். எனவே இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications