Home
Gadgets

ஆர்டர் போட்ருங்க.. ஆஃபரில் 55 இன்ச் 4K டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் Phoenix 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட்டில் தாம்சன் Phoenix 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.31,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன.

ஆர்டர் போட்ருங்க.. ஆஃபரில் 55 இன்ச் 4கே டிவி.. எந்த மாடல்?

தாம்சன் Phoenix 55 இன்ச் 4கே கூகுள் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Thomson Phoenix 55 inch Smart 4K Google TV Specifications): கியூஎல்இடி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் பிரைட்னஸ், 1.8 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 (HDR10) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ரியல்டெக் ARM Cortex A55 பிராசஸர் உடன் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தாம்சன் Phoenix கியூஎல்இடி டிவி. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் விவிட் (Vivid), ஸ்டான்டர்ட் (Standard), ஸ்போர்ட் (Sport), மூவி (Movie), கேம் (Game) உள்ளிட்ட பல்வேறு பிக்சர் மோட்கள் இந்த தாம்சன் டிவியில் உள்ளன.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த தாம்சன் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

டூயல் பேண்ட் வைஃபை, ப்ளுடூத், ஏர்பிளே சப்போர்ட், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த தாம்சன் டிவியில் உள்ளது. அதேபோல் குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவுடன் இந்த அசத்தலான டிவி வெளிவந்தது. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 60W ஸ்பீக்கர்கள் உடன் தாம்சன் Phoenix 55 இன்ச் 4கே கூகுள் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

Best Mobiles in India

English summary
Thomson Phoenix 55 inch Smart 4K Google TV available at 32 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X