பிளிப்கார்ட்டில் ஆர்டர் அள்ளுமே.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் 43 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?
தாம்சன் நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தாம்சன் நிறுவனத்தின் 43 இன்ச் 4கே டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட்டில் தாம்சன் Phoenix 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (Thomson Phoenix 43 inch QLED 4K Smart Google TV 2025) மாடலுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த தாம்சன் டிவியை ரூ.19499 விலையில் வாங்கிவிட முடியும்.

தாம்சன் Phoenix 43 இன்ச் 4கே கூகுள் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Thomson Phoenix 43 inch Smart 4K Google TV Specifications): கியூஎல்இடி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பிரைட்னஸ், 1.8 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 (HDR10) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ55 ரியல்டெக் பிராசஸர் உடன் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தாம்சன் Phoenix கியூஎல்இடி டிவி. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் விவிட் (Vivid), ஸ்டான்டர்ட் (Standard), ஸ்போர்ட் (Sport), மூவி (Movie), கேம் (Game) உள்ளிட்ட பல்வேறு பிக்சர் மோட்கள் இந்த தாம்சன் டிவியில் உள்ளன.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த தாம்சன் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

டூயல் பேண்ட் வைஃபை, ப்ளுடூத், ஏர்பிளே சப்போர்ட், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த தாம்சன் டிவியில் உள்ளது. அதேபோல் குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவுடன் இந்த அசத்தலான டிவி வெளிவந்தது. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 50W ஸ்பீக்கர்கள் உடன் தாம்சன் Phoenix 43 இன்ச் 4கே கூகுள் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.


Click it and Unblock the Notifications








