ரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் அசத்தலான 42-இன்ச் ஸ்மார்ட் டிவி.! 43-இன்ச் டிவியின் விலை இவ்வளவு தான்.!
இந்தியாவில் தாம்சன் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் தாம்சன் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரண்டு ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த இரண்டு புதிய டிவிகளும் நிறுவனத்தின் பாத்' தொடரின் (Path Series)ஒரு பகுதியாகும் மேலும் இவைகள் பிளிப்கார்ட்டில் நிகழும் குடியரசு தின விற்பனையில் வாங்க கிடைக்கும்.

தாம்சன் நிறுவனத்தின் 42-இன்ச் மற்றும் 43-இன்ச் விருப்பங்களில் வரும் இந்த இரண்டு டிவிகளுமே ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தின்கீழ் இயங்குகின்றன. மேலும் 42 இன்ச் டிவியானது மாடல் நம்பர் PATH212-ஐயும், 43 இன்ச் டிவியானது PATH0009BL மாடல் நம்பரையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள தாம்சன் பாத் 42-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு டிவி 9பை-யின் கீழ் இயங்குகின்றன. மேலும் இவற்றில் கூகுள் அசிஸ்டென்ட்டிற்கான ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளில் 1.4GHz ARM கார்டெக்ஸ்-ஏ 53 குவாட் கோர் ப்ராசஸர் உடனாக மாலி -450 எம்.பி 3 ஜி.பீ.யு-வை கொண்ட அம்லோஜிக் சிப்செட் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தாம்சன் நிறுவனத்தின் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் டிஎல்இடி ஐபிஎஸ் பேனலுடன் வருகின்றன. மேலும் 1,920 × 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 178 டிகிரி பார்வை கோணத்தை வழங்குகிறது. குறிப்பாக இந்த இரண்டு ஆண்ட்ராய்டு டிவிகளும் ப்ரைட்னஸ் மட்டத்தில் 500 நிட்ஸ் வரை செல்கின்றன.

தாம்சன் பாத் 43-இன்ச் மற்றும் 43-இன்ச் டிவிகள் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீதத்திற்கும் 500000: 1 டைனமிக் கான்ட்ராஸ்ட் ரேஷியோவுக்கும் துணைபுரிகின்றன. பின்பு இந்த இரண்டு டிவிகளும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வருகின்றன.

இரண்டு ஏ.வி. போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி 2.0 போர்ட்கள், இரண்டு எச்.டி.எம்.ஐ 2.0 போர்ட்கள், ஆப்டிகல் இன்புட், ஈதர்நெட் போர்ட், ஆர்.எஃப் இன்புட், லைன் இன்புட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவிகள்.மேலும் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல போர்ட்களை கொண்டுள்ளன இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள்.

இந்த புதிய டிவிகளின் முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் ஏர்ப்ளே (iOS) மற்றும் Chromecast (Android)க்கான ஆதரவு உள்ளது. எனவே பயனர்கள் இதன் மூலம் தங்கள் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனை டிவி ஸ்க்ரீனிற்கு கொண்டு வரலாம்.மேலும் 42-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 30 வாட் ஸ்பீக்கருடன் வருகிறது. 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 40 வாட் ஸ்பீக்கருடன் வருகிறது.

இந்த ஆண்ட்ராய்டு டிவிகளுக்கு தாம்சன் ஒரு ஸ்மார்ட் ரிமோட்டை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இது இது யூட்யூப், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் சோனிலிவ் போன்ற ஓவர்-தி-டாப் (OTT) இயங்குதளங்களுக்கான ஹாட்ஸ்கீகளுடன் வருகிறது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட தாம்சன் பாத் 42 இன்ச் PATH2121 ஆண்ட்ராய்டு டிவி விலை ரூ.19,999-ஆக உள்ளது. பின்பு தாம்சன் 43 இன்ச் PATH0009BL ஆண்ட்ராய்டு டிவியின் விலை ரூ.22,499-ஆக உள்ளது. மேலும் ஜனவரி 20-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications