Home
Gadgets

50 இன்ச் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது.. 16ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் ஒபி மேக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Thomson OP MAX 50 inch 4K Smart Google TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெசல் லெஸ் டிசைன், குவாட் கோர் பிராசஸர், 16ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தாம்சன் டிவி. மேலும் இப்போது தாம்சன் ஒபி மேக்ஸ் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது தாம்சன் ஒபி மேக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.22749 விலையில் வாங்கிவிட முடியும்.

50 இன்ச் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது.. எந்த மாடல்?

தாம்சன் ஓபி மேக்ஸ் 50 இன்ச் டிவி அம்சங்கள் (50 inch Thomson OP MAX TV Specifications): இந்த 50 இன்ச் தாம்சன் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், லூமினோசிட்டி என்ஹான்ஸ்மெண்ட், கட்டிங் எட்ஜ் பேக்லைட்னிங் மற்றும் டீப் கான்ட்ராஸ்ட் சப்போர்ட் கொடுக்க டிகியூஎல்இடி (TQLED) டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதுதவிர எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1 பில்லியன் கலர் டெப்த், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஐபிஎஸ் பேனல் (IPS Panel)ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. அதேபோல் குவாட் கோட் மீடியாடெக் பிராசஸர் கொண்டுள்ளது தாம்சன் ஒபி மேக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி 450 ஜிபியு (Mali 450 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இதுதவிர எம்இஎம்சி (MEMC) சப்போர்ட் கிடைக்கிறது.

2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, இன்-பில்ட் குரோம்காஸ்ட் (In-built Chromecast), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistan), கூகுள் டிவி கிட்ஸ் மோட் (Google TV Kids Mode), கூகுள் டியோ (Google Duo)போன்ற பல அசத்தலான அம்சங்கள் இந்த தாம்சன் ஓபி மேக்ஸ் டிவியில் உள்ளன.

50 இன்ச் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது.. எந்த மாடல்?

டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS TruSurround) போன்ற ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் இதில் 40W ஆடியோ அவுட் கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி தரமான ஆடியோ அனுபவத்தை
வழங்கும்.

வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது. பின்பு வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த தாம்சன் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Thomson OP MAX 50 inch 4K LED Smart Google TV price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X