Thomson நிறுவனம் அறிமுகம் செய்த QLED ஸ்மார்ட் டிவிகள்: நம்பமுடியாத விலை.!

|

தாம்சன் நிறுவனம் இந்தியாவில் புதிய 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் QLED ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளும் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்சன்

தாம்சன்

தாம்சன் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் வரவிருக்கும் Big Billion Days எனும் சிறப்பு விற்பனையில் வாங்க கிடைக்கும். இப்போது இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Nothing Phone (1) மற்றும் Google Pixel 6a மீது மாபெரும் தள்ளுபடி.! பிரீமியம் போன் வாங்க நல்ல சான்ஸ்!Nothing Phone (1) மற்றும் Google Pixel 6a மீது மாபெரும் தள்ளுபடி.! பிரீமியம் போன் வாங்க நல்ல சான்ஸ்!

டால்பி விஷன்

டால்பி விஷன்

தாம்சன் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகள் 4L QLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். அதேபோல் எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், டால்பி அட்மோஸ்ட், டால்பி டிஜிட்டல் பிளஸ்
உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவிகள்.

இப்படி பெஸ்டான Oppo போன்லாம் இவ்வளவு கம்மி விலையிலா? நம்பவே முடியல.!இப்படி பெஸ்டான Oppo போன்லாம் இவ்வளவு கம்மி விலையிலா? நம்பவே முடியல.!

 600 நிட்ஸ் ப்ரைட்னஸ்

600 நிட்ஸ் ப்ரைட்னஸ்

குறிப்பாக தாம்சன் 55-இன்ச் மற்றும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 550 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளன. ஆனால் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மட்டும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Android போனில் iPhone ஈமோஜியை பயன்படுத்துவது எப்படி? உங்க சாட்டிங்கை கெத்தாக்கும் டிப்ஸ்.!Android போனில் iPhone ஈமோஜியை பயன்படுத்துவது எப்படி? உங்க சாட்டிங்கை கெத்தாக்கும் டிப்ஸ்.!

மீடியாடெக்

மீடியாடெக்

இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளும் மீடியாடெக் MT9062 பிராசஸர் வசதியுடன் Mali-G52 GPU ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும் கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Amazon Great Indian Festival 2022: இந்த ட்ரிக் தெரிஞ்சா நீங்க கில்லாடி.! முழு சலுகையும் உங்களுக்கே.!Amazon Great Indian Festival 2022: இந்த ட்ரிக் தெரிஞ்சா நீங்க கில்லாடி.! முழு சலுகையும் உங்களுக்கே.!

16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

புதிய ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி, வூட் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த
ஸ்மார்ட் டிவிகள் அட்டகாசமான வடிவமைப்பில் வெளிவந்துள்ளன.

ASUS ROG Phone 6 Batman Edition விரைவில் அறிமுகமா? சூப்பர் ஹீரோ போன் உங்களுக்கும் வேணுமா?ASUS ROG Phone 6 Batman Edition விரைவில் அறிமுகமா? சூப்பர் ஹீரோ போன் உங்களுக்கும் வேணுமா?

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவிகளில் 40W ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த ஸ்பீக்கர்கள் DTS TruSurround ஒலிக்கான ஆதரவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த டிவிகள் சிறந்தஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

புளூடூத் 5.0, டூயல்-பேண்ட், மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான தாம்சன் ஸ்மார்ட் டிவிகள். மேலும் குரோமாஸ்ட், ஏர்பிளே ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு உள்ளிட பல சிறப்பு அம்சங்களைகொண்டுள்ளன புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவிகள்.

என்ன விலை?

என்ன விலை?

50-இன்ச் தாம்சன் QLED ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.33,999-ஆக உள்ளது.
55-இன்ச் தாம்சன் QLED ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.40,999-ஆக உள்ளது.
65-இன்ச் தாம்சன் QLED ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.59,999-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Thomson launches new QLED smart TVs in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X