Just In
- 1 hr ago
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- 1 hr ago
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 12 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 15 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
Don't Miss
- News
"செந்தில் பாலாஜி வந்துவிட்டாலே வெற்றி உறுதி.. அவர் எனக்கு இன்னொரு மகன்.." உருகிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
- Movies
விக்ரம் vs லியோ.. ஒவ்வொரு ஃபிரேமும் அப்படியே செதுக்கியிருக்காரே லோகேஷ்.. தெறிக்கும் கம்பேரிசன்ஸ்!
- Sports
கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
- Automobiles
இதுதான் ஸியோமி எலெக்ட்ரிக் கார்... இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. ஆனா எங்கேயோ உதைக்குது!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுப்பவராக இருப்பார்களாம்... இவங்கள காதலிச்சா பிரச்சினையே இல்ல!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Thomson: ரூ.10,999 விலையில் தரமான 'மேட் இன் இந்தியா' ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்!
தாம்சன் நிறுவனம் என்பது உண்மையில் ஒரு ஐரோப்பிய தொழில்நுட்ப உற்பத்தியாளர் நிறுவனமாகும். ஆனால், இந்த நிறுவனம் இந்தியாவைத் தளமாகக் கொண்டு ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் இயங்கிவருகிறது. தற்பொழுது புதிதாக 9 அட்டகாசமான ஸ்மார்ட் டிவி சாதனங்களை உருவாகியுள்ளது. மலிவு விலையில் துவங்கி லட்சம் ரூபாய் வரியில் புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவிலேயே 'மேட் இன் இந்தியா' டேக் உடன் உருவாக்கியுள்ளது.

ரூ .10,999 முதல் ஸ்மார்ட் டிவி
தாம்சன் நிறுவனம் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான இந்தியச் சந்தையில் தொடர்ச்சியான புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை தாம்சன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தாம்சன் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகள் ரூ .10,999 முதல் துவங்கி ரூ.99,999 வரை செல்கிறது. உலகளாவிய தொற்றுநோய் காரணமாக, மக்களின் தேவையை உணர்ந்து மலிவு விலையில் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
குறிப்பாக இந்த ஊரடங்கு நாட்களில் மாணவர்களுக்குத் தேவையா ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்குத் தேவையான அம்சங்களை ஸ்மார்ட் டிவியின் வழி அனுபவிக்க நிறுவனம் இந்த முயற்சியை முயன்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதற்காக தாம்சன் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை 'கூகிள் அசிஸ்டெண்ட்' ஆதரவுடன் இந்தியாவிலேயே தயாரித்து இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக 9 ஆண்ட்ராய்டு மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிவி
தாம்சன் நிறுவனம் புதிதாக 9 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மலிவான ஸ்மார்ட் டிவி பட்டியலில் 9A சீரிஸின் கீழ் மூன்று ஸ்மார்ட் டிவிகளைக் தாம்சன் கொண்டுள்ளது.

9A சீரிஸ் ஸ்மார்ட் டிவி
முதல் 9A சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலான '32 HD Path' டிவி ரூ .10,999 என்ற விலையில் வருகிறது, இரண்டாவது மாடல் '32 Bezel Less' டிவி ரூ .11,499. என்ற விலையிலும், மூன்றாவது மாடலான '40 FHD PATH 'மற்றும் '43 FHD PATH' டிவிகள் முறையே ரூ.16,499 மற்றும் ரூ .19,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

9R சீரிஸ் ஸ்மார்ட் டிவி
தாம்சன் 9R சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களின் கீழ் மொத்தம் 3 ஸ்மார்ட் டிவி மாடல்கள் உள்ளது, அவற்றில் '43 4K PATH' மாடல் ரூ .21,999 என்ற விலையிலும், '50 4K PATH' மாடல ரூ .25,999 என்ற விலையிலும் மற்றும் 9R சீரிஸின் '55 4K PATH' மாடல் ரூ .29,999 என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாம்சன் நிறுவனத்தின் இந்த அனைத்து மாடல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா சாதனங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

OATH PRO ஸ்மார்ட் டிவி
அதேபோல், தாம்சன் நிறுவனம் அதிகவிலை கொண்ட பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்களையும் தன் வசம் வைத்துள்ளது. OATH PRO என்ற தாம்சனின் கடைசி சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் ஒன்று பிரீமியம் பிரிவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதல் மாடலாக '50 OATH PRO' மாடல் டிவி ரூ. 28,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மாடலாக '75 OATH PRO' ரூ. 99,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470