Thomson நிறுவனத்திற்கு தாராள மனசு.. புதிய 50-இன்ச் ஸ்மார்ட் டிவி இவ்வளவு கம்மி விலையிலா? சூப்பர்..
சியோமி, ஒன்பிளஸ், எல்ஜி நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பெரிய பெரிய ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது தாம்சன் (Thomson) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் தாம்சன் (Thomson) நிறுவனம் புதிய 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.27,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், சியோமி, எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை ரூ.40,000-க்கு மேல் தான் அறிமுகம் செய்கின்றன. ஆனால் தாம்சன் நிறுவனம் மட்டும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து அசத்தி உள்ளது.

புதிய தாம்சன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த 50-இன்ச் ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
புதிய தாம்சன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (இயங்குதளம்) கொண்டு இந்த தாம்சன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த தாம்சன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட்டில் நெட்ஃபிக்ஸ், யூடியூப், கூகுள் பிளே மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிற்கான ஹாட்ஸ்கிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஓடிடி தளங்களை எளிமையாகப் பார்க்க முடியும்.
டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் ஆடியோ ஆதரவு கொண்ட 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய தாம்சன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

தாம்சன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் சில சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக தரமான அம்சங்களுடன் தாம்சன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








