சியோமி மி டிவிக்கு பதிலடி; மலிவு விலையில் தாம்சன் ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம்.!
40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது.
தற்சமயம் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக தாம்சன் நிறுவனம் 3 ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, குறிப்பாக மலிவு விலையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்சன் தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ள மாடல்களின் வரிசை- 43-இன்ச் யூஎச்டி ஸ்மார்ட் டிவி(43டிஎம்4377), 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099), 32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277).
ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த அட்டகாசமான மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களை மிகவும் எளிமையாக வாங்க முடியும், அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் ரூ செயற்கை நுண்ணறிவு சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. ஆன்லைன் தரவுகள் மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி:
தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை எல்ஜி ஐபிஎஸ் பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் எச்டிஆர் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி: விலை:
இந்த ஸ்மார்ட் டிவியில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி-டி720ஜிபியூ ஆதரவு மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை 27,999-ஆக உள்ளது.

40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099):
தாம்சன் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொதுவாக சாம்சங் எல்டி பேக்லைட் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099): விலை:
40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் 10வாட் ஸ்பீக்கர் மற்றும் யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை 19,990-ஆக உள்ளது.

32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277):
32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277) பொதுவாக சாம்சங் எல்டி பேக்லைட் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1366x768 பிக்சல் திர்மானம் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277): விலை:
32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277) மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.13,490-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications