Home
Gadgets

டிவி வாங்கலையோ டிவி.. ரூ.10,499 க்கு இப்படி ஒரு Smart TV-ஆ.. கம்மி விலையில் வந்த 5 புதிய Thomson டிவிகள்!

புதிய நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை (Smart TV) வாங்குவதில் உங்களுக்கு சில தயக்கங்கள் உள்ளதென்றால்.. மாறாக நன்கு அறியப்பட்ட பிராண்டின் (Well Known Brand) கீழ் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளில் ஒன்றைத்தான் வாங்க வேண்டும் என்கிற தேடலில் நீங்கள் இருந்தால்..

அதிலும் குறிப்பாக பட்ஜெட் விலை டிவிகளை தான் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனென்றால், மிகவும் பிரபலமான டிவி தயாரிப்பாளர் ஆன தாம்சன் (Thomson) நிறுவனத்தின் 5 புதிய ஸ்மார்ட் டிவிகளை பற்றிய தொகுப்பே இது!

கம்மி விலையில் வந்த 5 புதிய Thomson டிவிகள்!

தாம்சன் நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 5 புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. தாம்சனின் 5 புதிய டிவிகளானது, விலைக்கு ஏற்ப ரியல்டெக் (Realtek) ப்ராசஸர், கூகுள் டிவி ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Google TV OS), 4கே டிஸ்ப்ளே (4K Display) போன்ற முக்கிய அம்சங்களுடன் நிறுவனத்தின் புதிய எஃஏ சீரீஸின் (FA Series) கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தாம்சன் எஃப்ஏ சீரீஸ் கூகுள் டிவிக்களின் அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, தாம்சன் எஃப்ஏ சீரீஸின் கீழ் 5 வெவ்வேறு அளவிலான டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது 32 இன்ச், 40 இன்ச், 42 இன்ச், 43 இன்ச் மற்றும் 50 இன்ச் ஸ்க்ரீன் அளவுகளில் வாங்க கிடைக்கும் .

அவைகளில் 30 இன்ச் மாடல் எச்டி டிவியாகும்; 40 மற்றும் 42 இன்ச் மாடல்கள் ஃபுல்எச்டி டிவிகளாகும். கடைசியாக உள்ள 43 இன்ச் மற்றும் 50 இன்ச் மாடல்கள் 4கே டிஸ்பிளே கொண்ட கூகுள் டிவிகளாகும். எச்டி மற்றும் ஃபுல் எச்டி மாடல்கள் ஆனது ரியல்டெக் ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ், 30W ஸ்பீக்கர்கள், டால்பி டிஜிட்டல் (Dolby Digital) போன்ற அம்சங்களுடன் வருகின்றன.

மேலும் இந்த டிவிகள் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), ஆப்பிள் டிவி (Apple TV) போன்ற 6,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ் மற்றும் கேம்களுக்கான அணுகல்களையும் வழங்கும்.

4கே ரெசல்யூஷன் உடன் வரும் தாம்சன் எஃப்ஏ சீரீஸ் கூகுள் டிவிகள் ஆனது (அதாவது 43 மற்றும் 50 இன்ச் மாடல்கள் ஆனது) பெசல்-லெஸ் பேனலுடன் வருகின்றன. மேலும் அவைகள் டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) போன்ற அம்சங்களையும் பேக் செய்கின்றன.

மேலும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TrueSurround), 40W டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்ஸ் (40W Dolby Audio Stereo Box Speakers), 2ஜிபி ரேம், 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், டூயல் பேண்ட் (2.4 + 5) ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை மற்றும் கூகுள் டிவி போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலானது ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கும்; 40-இன்ச் மற்றும் 42-இன்ச் ஃபுல்எச்டி மாடல்கள் முறையே ரூ.15,999 மற்றும் ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும். 43-இன்ச் மற்றும் 50-இன்ச் 4கே கூகுள் டிவி மாடல்கள் முறையே ரூ.22,999 மற்றும் ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Thomson Launched 5 New Smart TVs in India In that 43 inch and 50 inch 4K TVs Are Run On Google TV OS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X