Home
Gadgets

மொத்த ஸ்மார்ட் TV மார்க்கெட்டும் காலி.. ரூ.20,000 க்கும் கம்மியான விலைக்கு 50-இன்ச் 4K QLED ஸ்மார்ட் டிவி!

இது பிளிப்கார்ட்டில் ஆபர் விலையில் கிடைக்கும் ஏதோவொரு டிவி அல்ல.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale) விற்பனைக்கு முன்னதாக, தாம்சன் (Thomson) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2 புதிய ஸ்மார்ட் டிவிகளில் ஒன்றாகும்.

தாம்சன் நிறுவனம் தனது புதிய 50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஜியோடெலி ஓஎஸ் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை (THOMSON JioTele OS QLED Smart TVs) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. செம்ம டிமாண்ட்-ஐ ஏற்படுத்தியுள்ள ஜியோடெலி ஓஎஸ் கொண்ட டிவிகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தி உள்ளதால், தாம்சன் நிறுவனத்தின் இந்த 2 மாடல்களுமே டிவி சந்தையில் ஒரு புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.20,000 க்கும் கம்மியான விலைக்கு 50-இன்ச் 4K QLED ஸ்மார்ட் டிவி!

தாம்சன் நிறுவனத்தின் இந்த 2025 ஜியோடெலி ஓஎஸ் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் ஆனது பெசல்-லெஸ் வடிவமைப்பு (Bezel-less design) மற்றும் அலாய் ஸ்டாண்டுகளுடன் (Alloy stands) வருகின்றன. மேலும் இரண்டு மாடல்களிலும் 3840 × 2160 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 1.1 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் மற்றும் 450 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸை வழங்கும் 4கே க்யூஎல்இடி பேனல் உள்ளது.

லைவ் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்காக இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஸ்போர்ட்ஸ் மோடும் (Sports Mode) சேர்க்கப்பட்டு உள்ளது. ஆடியோவை பொறுத்தவரை, இந்த டிவிகளில் 48W ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் இவைகள் டால்பி டிஜிட்டல் பிளஸை (Dolby Digital Plus) ஆதரிக்கின்றன. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை டூயல்-பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட்கள், யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) ஆகியவைகள் உள்ளன

வாய்ஸ் எனேபிள்டு ரிமோட் (Voice-enabled remote) உடன் வரும் தாம்சன் ஜியோடெலி ஓஎஸ் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் ஆனது 10 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் செயல்படும் ஹலோஜியோ அசிஸ்டண்டை (HelloJio Assistant) ஆதரிக்கிறது. இதன் ஜியோடெலி ஓஎஸ் (JioTele OS) தளமானது 10 க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களிலிருந்து பரிந்துரைகளை வழங்குகிறது.

கூடவே 400 க்கும் மேற்ப்பட்ட லைவ் டிவி அணுகல்கள், ஜியோ கேம்ஸ் (JioGames) மற்றும் ஜியோ ஸ்டோர் (JioStore) ஆகியவைகளையும் வழங்குகிறது. மேலும் தாம்சனின் இந்த 2 ஜியோடெலி ஓஎஸ் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளுமே 2 ஜிபி ரே (2GB RAM) மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஏஎம்லாஜிக் (Amlogic) சிப்செட்டில் இயங்குகின்றன.

தாம்சன் 50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஜியோடெலி ஓஎஸ் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 50 இன்ச் மாடல் (50TJQ002) ஆனது ரூ.19,999 க்கும் மற்றும் 55 இன்ச் மாடல் (55TJQ0032) ஆனது ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளுமே 1 வருட உத்தரவாதத்துடன் வருகின்றன. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை 2 ஸ்மார்ட் டிவிகளுமே 3 மாத இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா (Jio Hotstar Subscription) மற்றும் 1 மாத ஜியோ கேம்ஸ் சந்தா (Jio Games Subscription) ஆகியவைகளை பெறும்.

மேலும் ஆக்சிஸ் வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். தாம்சன் நிறுவனத்தின் இந்த 2 புதிய ஜியோடெலி ஓஎஸ் க்யூஎல்டி ஸ்மார்ட் டிவிகளுமே வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் (Flipkart) வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
THOMSON Introduced new 50 inch 55 inch JioTele OS QLED Smart TV in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X