Home
Gadgets

இறங்கி அடிச்ச பிளிப்கார்ட்.. பெசல் லெஸ் டிசைன்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் 43 இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டால்பி டிஜிட்டல் பிளஸ், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் எப்ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Thomson FA Series 43 inch Full HD Smart Android TV) மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.15,249 விலையில் வாங்கிவிட முடியும்.

இறங்கி அடிச்ச பிளிப்கார்ட்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?

தாம்சன் எப்ஏ சீரிஸ் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Thomson FA Series 43 inch Android TV Specifications): ஃபுல் எச்டி எல்இடி (Full HD LED)டிஸ்பிளே வசதியுடன் இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 1920 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவயில் உள்ளன.

அதேபோல் Realtek பிராசஸர் வசதியுடன் தாம்சன் எப்ஏ சீரிஸ் 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக பெசல் லெஸ் டிசைன் ( bezel less design) வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் இருக்கின்றன. குறிப்பாக கேமிங் வசதிக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 30W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.

நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஹங்காமா, ஜியோசினிமா, ஜீ5, எம்எக்ஸ் பிளேயர் டிவிஉள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த 43 இன்ச் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி விவிட் கலர்ஸ் (Vivid colors) ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் வாயஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இதனுடன் வருகிறது. இதுதவிர ஓடிடி ஆப்ஸ்களின் ஷார்ட்கட் பட்டர்களைக் கொண்டுள்ளது இந்த ரிமோட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Thomson FA Series 43 inch Android TV price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X