அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. வெறும் ரூ.16,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் தாம்சன் டிவி.. எந்த மாடல்?
தாம்சன் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளன. அதேபோல் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு ஆபர் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச்ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 (Thomson FA Series Full HD LED Smart Android TV 2023) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.16,999 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த அசத்தலான தாம்சன் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் டிவி அம்சங்கள்: 1080 x 1920 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச்ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் Realtek பிராசஸர் வசதியுடன் தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் டிவி வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடல் பெசல்-லெஸ் டிசைன் வசதியுடன் வெளிவந்துள்ளது.அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் இருக்கின்றன. குறிப்பாக கேமிங் வசதிக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாமசான தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.
நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஹங்காமா, ஜியோசினிமா, ஜீ5, எம்எக்ஸ் பிளேயர் டிவி உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த 42-இன்ச் டிவியில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த டிவி விவிட் கலர்ஸ்(Vivid colors) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் வாயஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இதனுடன் வருகிறது. இதுதவிர ஓடிடி ஆப்ஸ்களின் ஷார்ட்கட் பட்டர்களைக் கொண்டுள்ளது இந்த ரிமோட்.
அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த தாம்சன் எப்ஏ சீரிஸ் 42-இன்ச் டிவி ஆனது மிகவும் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் தாம்சன் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications