Home
Gadgets

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.3,899-க்கு சவுண்ட்பார் இருக்கு.. சப்வூப்பர் இருக்கு.. ஆடியோ சும்மா கிழி.. எந்த மாடல்?

அடிமட்ட பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் ஆடியோ அவுட் கொண்ட சவுண்ட்பார் இருக்கா? என்று கேட்கும் ஆடியோ பிரியர்களுக்கு சவுண்ட்பார் மட்டுமல்லாமல், கூடவே சப்வூப்பரும் கொடுக்கிறது தாம்சன் (THOMSON) நிறுவனம். இப்போது, வெறும் ரூ.3,899 பட்ஜெட்டில் ஆல்பாபீட்60 (AlphaBeat60) மாடலை இந்திய மார்கெட்டில் களமிறக்கி இருக்கிறது. இதுபோக ஆல்பாபீட்25 (AlphaBeat25) மாடலையும் அடிமட்ட பட்ஜெட்டில் கொடுக்க இருக்கிறது. இந்த தாம்சன் சவுண்ட்பார் மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ரொம்ப பெருசு கிடையாது, சின்னதா ஒரு ஹால் இருக்கு, அதுல பட்டையை கிளப்புரு மாதிரி ஆடியோ கொடுக்குற மாதிரி கம்மி பட்ஜெட்ல ஒரு சவுண்ட்பார் கிடைச்சா வாங்கனும்பா என்று திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ஏற்றபடி இந்த ஆல்பாபீட் மாடல்கள் இருக்கின்றன. ஆல்பாபீட்25 மாடலில் சவுண்ட்பார் மட்டும் வருகிறது. அதுவே ஆல்பாபீட்60 மாடலில் சவுண்ட்பார் மற்றும் சப்வூப்பர் வருகிறது.

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.3,899-க்கு சவுண்ட்பார் + சப்வூப்பர் இருக்கு!

தாம்சன் ஆல்பாபீட்25 அம்சங்கள் (THOMSON AlphaBeat25 Specifications): இந்த சவுண்ட்பார் மாடலில் 25W ஆடியோ அவுட் கிடைக்கிறது. வயர்டு மற்றும் வயர்லெஸ் கனெக்டிவிட்டி செய்து கொள்ளலாம். 2000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) கிடையாது. இருப்பினும், யுஎஸ்பி பிளேபேக் (USB Playback), ஏயுஎக்ஸ் இன் (AUX IN) சப்போர்ட் வருகிறது.

3.5 ஸ்டீரியோ ஹெட்போன் ஜாக் (Stereo Headphone Jack) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) செய்து கொள்ளலாம். வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பார்க்கையில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) வருகிறது. இந்த சவுண்ட்பாரில் 2 இன்ச் டிரைவர்கள் 2 பேக் செய்யப்பட்டுள்ளன. ஃபுல் சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் தேவைப்படும்.

ஃபுல் சார்ஜ் செய்த பிறகு 16 மணி நேரங்களுக்கு பயன்படுத்தலாம். ரெட் மற்றும் ப்ளூ லைட்கள் இடம்பெற்றுள்ளன. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் வருகிறது. பேட்டரி இருப்பதால், எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பயன்படுத்தலாம். காம்பாக்ட் டிசைனில் ஹேண்டில் செய்ய பக்காவான மாடலாக இது இருக்கிறது.

தாம்சன் ஆல்பாபீட்60 அம்சங்கள் (THOMSON AlphaBeat60 Specifications): இந்த ஆல்பாபீட்60 மாடலில் சவுண்ட்பார் மற்றும் சப்வூப்பர் கிடைக்கிறது. 60W ஆடியோ அவுட் பெற்று கொள்ளலாம். முந்தைய மாடலை போலவே வயர்டு மற்றும் வயர்லெஸ் கனெக்டிவிட்டி வருகிறது. ஆனால், சப்வூப்பர் வருவதால் பேட்டரி கிடையாது. இந்த மாடலும் 3.5 ஸ்டீரியோ ஹெட்போன் ஜாக் வருகிறது.

அதேபோல ஏயுஎக்ஸ் இன் மற்றும் யுஎஸ்பி பிளேபேக் கனெக்டிவிட்டி உள்ளது. ப்ளூடூத் 5.3 வயர்லெஸ் கனெக்டிவிட்டி வருகிறது. இந்த மாடலில் எச்டிஎம்ஐ போர்ட் உள்ளது. அதேபோல டைப்-சி கனெக்டிவிட்டி வருகிறது. சவுண்ட்பாரில் ஆர்ஜிபி லைட்டிங் (RGB Lighting) வருகிறது. 2.25 இன்ச் டிரைவர்கள் 2 வருகின்றன. 4 இன்ச் சப்வூப்பர் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலிலும் ரிமோட் கன்ட்ரோல் உள்ளது. இப்போது விலை விவரங்களுக்கு வருவோம். தாம்சன் ஆல்பாபீட்25 மாடலின் விலை ரூ.1,699 ஆக இருக்கிறது. அதேபோல தாம்சன் ஆல்பாபீட்60 மாடலின் விலை ரூ.3,899ஆக இருக்கிறது. சப்வூப்பர் வருவதால், இந்த விலைக்கு கிடைக்கிறது. ஆனால், இதுவே மலிவான விலையாகும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆல்பாபீட் மாடல்களை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. ரூ.5,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு நல்ல அவுட்புட் கொடுக்கும் சவுண்ட்பார்கள் வேண்டுமானால், இந்த மாடல்களை ஆப்ஷனில் எடுக்கலாம். இருப்பினும், 5.1 சேனல் வராதது குறையாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
THOMSON AlphaBeat60 Soundbar With Subwoofer Sale Under Rs 4000 From September 21 in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X