Home
Gadgets

இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்.. 55 இன்ச் 4K டிவியை வாங்க சரியான நேரம்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

தாம்சன் 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஜியோடெலி ஓஎஸ் டிவி (Thomson 55 inch QLED 4K JioTele OS TV ) மாடல் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஜியோடெலி ஓஎஸ் டிவி மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த தாம்சன் டிவி மாடலை ரூ.25,499 விலையில் வாங்கிவிட முடியும்.

 இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்.. 55 இன்ச் 4K டிவியை வாங்க சரியான நேரம்..

தாம்சன் 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஜியோடெலி ஓஎஸ் டிவி அம்சங்கள் (Thomson 55 inch QLED 4K JioTele OS TV Specifications): இந்த 55 இன்ச் தாம்சன் டிவி கியூஎல்இடி 4கே (QLED 4K) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3840×2160 பிக்சல்ஸ், 1.1 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 450 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஸ்போர்ட்ஸ் மோட் (Sports mode) ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. பின்பு அலாய் ஸ்டாண்ட்ஸ் (alloy stands) மற்றும் பெசல்-லெஸ் (Bezel-less) டிசைன் உடன் இந்த புதிய தாம்சன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அம்லாஜிக் சிப்செட் (Amlogic Chipset) உடன் தாம்சன் 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஜியோடெலி ஓஎஸ் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஜியோடெலி ஓஎஸ் (JioTele OS) மூலம் இந்த தாம்சன் டிவி இயங்குகிறது. குறிப்பாக இது மேம்பட்ட புதிய அனுபவத்தைத் தரும்.

400-க்கும் மேற்பட்ட லைவ் சேனல்கள் சப்போர்ட், ஜியோகேம்ஸ், ஜியோஸ்டோர் ஆதரவுடன் இந்த அட்டகாசமான தாம்சன் 55-இன்ச் ஜியோ டெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த தாம்சன் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஹலோஜியோ வாய்ஸ் அசிஸ்டண்ட் (HelloJio voice assistant) ஆதரவு கொண்டுள்ளது தாம்சன் ஸ்மார்ட் டிவி. அதுவும் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் ஆதரவை வழங்குகிறது இந்த தாம்சன் டிவி மாடல். யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.

 இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்.. 55 இன்ச் 4K டிவியை வாங்க சரியான நேரம்..

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லேன், ஏவி இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த தாம்சன் 55 இன்ச் ச் ஜியோ டெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது. வாய்ஸ் அசிஸ்ட்ணட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ஸ்மார்ட் ரிமோட்டில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS TruSurround) போன்ற ஆடியோ அம்சங்கள் கொண்ட 48W ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் டிவி வெளிவந்தது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Thomson 55 inch 4K JioTele OS TV available at 33 percent discount in Flipkart: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X