Home
Gadgets

ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த Thomson.. ரூ.19,999 பட்ஜெட்டில் புதிய 50 இன்ச் டிவி அறிமுகம்..

தாம்சன் (Thomson) நிறுவனம் இந்தியாவில் 50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஜியோ டெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை (THOMSON 50 and 55 JioTele OS QLED Smart TV) அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவிகள் கம்மி பட்ஜெட்டில் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த புதிய தாம்சன் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

தாம்சன் ஜியோடெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் ( Thomson JioTele OS QLED Smart TV Specifications): இந்த புதிய 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கியூஎல்இடி 4கே (QLED 4K) டிஸ்பிளே வசதியுடன வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 3840×2160 பிக்சல்ஸ், 1.1 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 450 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட் அம்சங்கள் உள்ளன.

ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த Thomson..

இதுதவிர ஸ்போர்ட்ஸ் மோட் (Sports mode) ஆதரவையும் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள். பின்பு அலாய் ஸ்டாண்ட்ஸ் (alloy stands) மற்றும் பெசல்-லெஸ் (Bezel-less) டிசைன் உடன் இந்த புதிய தாம்சன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அம்லாஜிக் சிப்செட் (Amlogic Chipset) உடன் தாம்சன் 50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஜியோ டெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஜியோடெலி ஓஎஸ் (JioTele OS) மூலம் இந்த தாம்சன் டிவிகள் இயங்குகின்றன.

ஹலோஜியோ வாய்ஸ் அசிஸ்டண்ட் (HelloJio voice assistant) ஆதரவு கொண்டுள்ளன புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவிகள். அதுவும் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் ஆதரவை வழங்குகிறது இந்த புதிய டிவிகள். யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.

இதுதவிர 400-க்கும் மேற்பட்ட லைவ் சேனல்கள் சப்போர்ட், ஜியோகேம்ஸ், ஜியோஸ்டோர் ஆதரவுடன் தாம்சன் 50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஜியோ டெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த தாம்சன் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லேன், ஏவி இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் தாம்சன் 50-இன்ச் மற்றும் 55-இன்ச் ஜியோ டெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பின்பு ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவிகளுடன் வருகிறது. அதாவது வாய்ஸ் அசிஸ்ட்ணட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ஸ்மார்ட் ரிமோட்டில் உள்ளன.

ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த Thomson..

தாம்சன் 50-இன்ச் ஜியோ டெலி ஓஎஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. பின்பு இதன் 55-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. 2025 செப்டம்பர் 23 -ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த டிவிகள் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிகளை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும்.

இதுதவிர இந்த டிவிகளை வாங்கினால் 3 மாத இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் 1 மாத இலவச ஜியோ கேம்ஸ் சந்தா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த தாம்சன் டிவிகள் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Thomson 50 55 JioTele OS QLED Smart TV launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X