Home
Gadgets

சும்மா பளபளனு இருக்கு.. கம்மி பட்ஜெட்.. JioTele OS, டால்பி ஆடியோ, Thomson கியூஎல்இடி TV அறிமுகம்.. எந்த மாடல்?

சியோமி, சாம்சங், எல்ஜி போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது தாம்சன் நிறுவனம். குறிப்பாக தாம்சன் நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் JioTele OS மூலம் இயங்கும் புதிய 43 இன்ச் கியூஎல்இடி டிவியை அறிமுகம் செய்துள்ளது தாம்சன்.

அதாவது புதிய தாம்சன் 43 இன்ச் கியூஎல்இடி டிவி ஆனது 4K டிஸ்பிளே, 40W ஸ்பீக்கர்கள், தரமான பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய தாம்சன் டிவியின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சும்மா பளபளனு இருக்கு.. Thomson கியூஎல்இடி TV அறிமுகம்.. எந்த மாடல்?

தாம்சன் 43 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Thomson 43 inch QLED TV Specifications): 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த தாம்சன் டிஸ்பிளே. மேலும் எச்டிஆர் (HDR) ஆதரவு, 450 நிட்ஸ் பிரைட்னஸ், 1.1 பில்லயன் கலர்ஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் ஜியோடெலி ஓஎஸ் (JioTele OS) மூலம் இந்த தாம்சன் 43 இன்ச் கியூஎல்இடி டிவி இயங்குகிறது. அதுவும் உலகளாவிய மற்றும் பிராந்திய OTT ஆப்கள் மற்றும் 300+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஜியோ கேம்களுக்கான ஆதரவு வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

சக்திவாய்ந்த ஆம்லாஜிக் பிராஸசர் (Amlogic processor) உடன் இந்த அட்டகாசமான தாம்சன் 43 இன்ச் கியூஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராஸசர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எனவே அனைத்து ஆப்ஸ்களையும் இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம்.

டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) மற்றும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) ஆதரவு கொண்ட 40W ஸ்பீக்கர்கள் உடன் தாம்சன் 43 இன்ச் கியூஎல்இடி டிவி வெளிவந்துள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தாம்சன் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த டிவியில் ஹலோஜியோ மூலம் 10 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் குரல் தேடலுக்கான (வாய்ஸ் சர்ச்) ஆதரவும் உள்ளது. பின்பு இந்த டியிவின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.

சும்மா பளபளனு இருக்கு.. Thomson கியூஎல்இடி TV அறிமுகம்.. எந்த மாடல்?

ஸ்மார்ட் ரிமோட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த தாம்சன் 43 இன்ச் கியூஎல்இடி டிவி. அவுவும் நெட்பிளிக்ஸ், ஜியோ சினிமா, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற தளங்களின் ஷார்ட்கட் கீ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிமோட். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0 போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.

தாம்சன் 43 இன்ச் கியூஎல்இடி டிவியின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பிப்ரவரி 21 முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த டிவியை வாங்க முடியும். மேலும் இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ஜியோ நிறுவனம் சில குறிப்பிட்ட சலுகைகள் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Thomson 43-inch QLED TV with JioTele OS launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X