43 இன்ச் 4K டிவியை அறிமுகம் செய்த Thomson.. கூகுள் டிவி OS.. 16ஜிபி மெமரி.. என்ன விலை?
தாம்சன் நிறுவனம் புதிய ஏஐ-பவர்டு பீனிக்ஸ் கியூஎல்இடி 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (AI-powered Thomson 43-inch Phoenix 4K QLED TV) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டிவி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தாம்சன் Phoenix கியூஎல்இடி 43 இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Thomson 43 inch Phoenix 4K QLED TV Specifications): 4K கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10, 1 பில்லியன் கலர்ஸ், வைடு கலர் காமட் (Wide Colour Gamut) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது.

AI PQ சிப்செட் வசதியுடன் இந்த தாம்சன் Phoenix கியூஎல்இடி 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. அதேபோல் ஏஆர்எம் கார்டெக்ஸ் A55*4 பிராசஸர் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் ட்ரூசர்ரவுண்ட் (DTS TruSurround) ஆதரவு கொண்ட 50W ஸ்பீக்கர்கள் இந்த புதிய தாம்சன் டிவியில் உள்ளன. குறிப்பான இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவியில் பல சவுண்ட் மோட்கள் உள்ளது. அதேபோல் இந்த டிவி பெசல் லெஸ் டிசைன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் தாம்சன் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
டூயல் பேண்ட் வைஃபை, ப்ளுடூத் 5.0, ஏர்பிளே சப்போர்ட், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த தாம்சன் Phoenix கியூஎல்இடி 43 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. அதேபோல் குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவுடன் இந்த அசத்தலான தாம்சன் டிவி வெளிவந்தது.
மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி இந்த அசத்தலான தாம்சன் Phoenix கியூஎல்இடி 43 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தாம்சன் Phoenix கியூஎல்இடி 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,499-ஆக உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications