Home
Gadgets

புதுசா Pro மாடல் வந்ததும் பழசுக்கு டிஸ்கவுண்ட்.. அதுவும் 52 மணிநேர பேட்டரி வழங்கும் Realme Buds மீது!

ரியல்மி (Realme) நிறுவனம் ஆனது 53dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட அதன் லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆன ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ (Realme Buds Air 7 Pro) மாடலை அறிமுகம் செய்த வேகத்தில் அதே சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ரியல்மி பட்ஸ் ஏர் 7 (Realme Buds Air 7) மாடல் மீது லிமிடட் டைம் ஆபர் (Limited Time Offer) அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரியல்மிபட்ஸ் ஏர் 7 மாடல் ஆனது ரூ.200 கூப்பன் தள்ளுபடியுடன் (Coupon Discount) வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த இயர்பட்ஸ் தற்போது அதன் அசல் விலையான ரூ.2,999 க்கு பதிலாக ரூ.2,799 க்கு விற்பனையாகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது ஒரு லிமிடட் டைம் ஆபர் ஆகும்; அதாவது இது சில நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும்.

புதுசா Pro மாடல் வந்ததும் பழசுக்கு டிஸ்கவுண்ட்!

ரியல்மி பட்ஸ் ஏர் 7 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- 12.4mm டைனமிக் டீப் ட்ரைவர்ஸ்
- Hi-Res ஆடியோ சான்றிதழ்
- 52dB வரை ANC
- 360-டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ
- 6 மைக் அமைப்பு
- ப்ளூடூத் 5.4
- SBC, AAC மற்றும் LHDC 5.0 ஆடியோ கோடெக்குகள்

- டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி
- Swift Pair மற்றும் Google Fast Pair ஆதரவு
- IP55 தூசி மற்றும் ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட்
- இயர்போன்கள் ஒவ்வொன்றும் 62mAh பேட்டரியை கொண்டுள்ளன
- கேஸில் 480mAh செல் உள்ளது
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 13 மணிநேரம் வரை பயன்பாடு
- கேஸுடன் சேர்த்து 52 மணி நேரம் வரை பயன்பாடு
- 10 நிமிட சார்ஜ் 10 மணி நேரம் வரை பயன்பாடு

புதிதாக அறிமுகமான ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோவின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் இது ரூ.5,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Fiery Red, Glory Beige, Metallic Grey மற்றும் Racing Green 4 ஆகிய கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரியல்மி அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், மின்த்ரா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கிறது.

ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ இயர்பட்ஸ் மாடலின் விரிவான அம்சங்கள்: கேஸுடன் சேர்த்து, ஒரே சார்ஜில் 48 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாக கூறப்படும் இந்த இயர்பட்ஸ் ஆனது 45ms வரையிலான லோ லேட்டன்சி மோட்-ஐயும் ஆதரிக்கின்றன. மேலும் இது AI லைவ் டிரான்ஸ்லேட்டர், ஃபேஸ் டு ஃபேஸ் டிரான்ஸ்லேட்டர் மற்றும் AI இன்குவைரி AI அம்சங்களுக்கான ஆதரவுடன் வருகிறது.

ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோவின் விரிவான அம்சங்கள்: ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோவின் பட்ஸ்கள் இன்-இயர் வடிவமைப்பை பெற்றுள்ளன, மேலும் 11mm மற்றும் 6mm டூயல்-டாக் டிரைவர் அமைப்பையும் கொண்டுள்ளன. இது 6-மைக் AI-ஆதரவு கொண்ட நாய்ஸ் கேன்சலேஷன் அமைப்பை கொண்டுள்ளன மற்றும் முன்னரே குறிப்பிட்டபடி இது 53dB ANC வரையிலான ஆதரவை வழங்கும்

ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ மாடல் ஆனது ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் சான்றிதழ் மற்றும் LHDC ஆடியோ கோடெக் ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த இயர்போன்கள் ஸ்விஃப்ட் பேர், ப்ளூடூத் 5.4 மற்றும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ள. குறைந்தபட்ச ஆடியோ-விஷுவல் லேக்கிற்கு இந்த பட்ஸ்கள் 45ms வரையிலான லோ லேடன்சியை ஆதரிக்கின்றன.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP55 ரேட்டிங் உடன் இந்த இயர்பட்ஸ் AI லைவ் டிரான்ஸ்லேட்டர் போன்ற AI அம்சங்களை ஆதரிக்கிறது. இதன்கீழ் பயனர்கள் ஜெமினி AI வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் நேரடி மொழிபெயர்ப்பை பெறலாம். ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ மாடலின் கேஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் அது 48 மணிநேரம் வரையிலான பிளேபேக் டைமை வழங்கும் என்று கூறப்படுகிறது. LHDC உடன், மொத்த பிளேபேக் நேரம் 28 மணிநேரமாக குறையும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், 10 நிமிடங்கள் குவிக் சார்ஜ் செய்தால் 11 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
This Realme Buds gets Limited Time Coupon Discount Offer After Realme Buds Air 7 Pro Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X