போலியான ஸ்வைப் மெஷினை பார்த்ததுமே கண்டுப்பிடிக்க 5 டிப்ஸ்.!

|

பணத்தை பாக்கெட்டில் வைத்துகொண்டு சுற்றுவது எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கலான ஒரு விடயமோ, அதே அளவிலான சிக்கல்களை பணபரிமாற்றம் செய்யும் நோக்கத்தில் நிகழ்த்தப்படும் கிரெடிட் கார்டு ஸ்வைப்களிலும் உள்ளன என்ற விவரம், நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.?

நம்மில் பலர் - நமக்கே தெரியாமல் நமது கிரெடிட் அட்டை விவரங்களை நூதன திருடர்களுக்கு வழங்குவதின் முள்ளம் பலியாளாகி கொண்டிருக்கிறோம். ஷாப்பிங் மால், தெருவோர கடைகள் அல்லது உணவகங்கள் என நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஸ்வைப்பும் ஒரு "எலிப்பொறி" என்பதை, இனி நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற நூதன திருட்டை முன்பே கண்டறிவது எப்படி.? இதிலிருந்து தப்பிப்பது எப்படி.?

சிக்கி கொள்ளாமல் இருப்பது எப்படி.?

சிக்கி கொள்ளாமல் இருப்பது எப்படி.?

ஸ்வைப் மெஷின் கொண்டு நிகழ்த்தப்படும் நூதன திருட்டை ஸ்கிம்மிங் (Skimming) என்றவொரு பொதுவான பெயரின் கீழ் குறிப்பிடலாம். இம்மாதிரியான ஸ்கிம்மிங் குற்றங்களில் சிக்கி கொள்ளாமல் இருப்பது எப்படி என்பது சார்ந்த வழிகாட்டி விவரங்களை கடன் அட்டை உற்பத்தியாளரான இன்ஜெனிகோ (Ingenico) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

60% பகுதி மட்டுமே ஸ்வைப் மெஷினிற்குள் நுழையும்

60% பகுதி மட்டுமே ஸ்வைப் மெஷினிற்குள் நுழையும்

பொதுவான வைப்மெஷின்களை காட்டிலும் ஸ்கிம்மிங் ஸ்வைப் மெஷின்கள் அளவில் சற்று பெரிதாக இருக்கும் என்று இன்ஜெனிகோ வழிகாட்டி நம்மை எச்சரிக்கிறது. அதாவது உள்நுழைக்கப்படும் அட்டையானது முழுமையாக உள்ளே நுழைந்தால் அது சந்தேகத்திற்கிடமான ஸ்வைப் மெஷின் ஆகும். பொதுவாக அட்டையின் 60% பகுதி மட்டுமே ஸ்வைப் மெஷினிற்குள் நுழையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உயரம் மற்றும் அகலத்தில்

உயரம் மற்றும் அகலத்தில்

உடன் ஸ்கிம்மர் டிவைஸ் ஆனது அளவீட்டில் - உயரம் மற்றும் அகலத்தில் - பொதுவான ஸ்வைப் மெஷினை விட பெரிதாக இருக்கும் இதனால் தான் அது உண்மையான சாதனத்தை விட பெரியதாக இருக்கிறது மற்றும் இதுதான் மோசடியான சாதனங்களை கண்டுபிடிக்க நமக்கு உதவும் ஒரு முக்கிய அம்சமாகும்.

சற்று குறைவான ஹைலைட்ஸ்

சற்று குறைவான ஹைலைட்ஸ்

ஸ்கிம்மர் டிவைஸ்களில் உள்ள பொத்தான்கள் நிஜமான ஸ்வைப் மெஷின்களில் உள்ள பொத்தான்களை விட சற்று குறைவான ஹைலைட்ஸ்தனை பெறும். இதைக்கொண்டும் போலியான சாதனத்தை உடனடியாக கண்டறியலாம்.

பச்சை நிற எல்இடி லைட்

பச்சை நிற எல்இடி லைட்

உடன் ஒரு ஸ்கிம்மர் இணைக்கப்பெற்ற ஸ்வைப் சாதகமானது அட்டையை உள்நுழைக்கும் போது நிகழ்த்தப்படும் ஸ்கேனை வெளிப்படுத்தும் பச்சை நிற எல்இடி லைட்டை ஒளிர விடாமல் செய்யும்.

பல ஆப்ரேஷன் எர்ரஸ்

பல ஆப்ரேஷன் எர்ரஸ்

சில நேரங்களில் ஸ்கிம்மர்கள் தரவுகளை ஸ்கேன் செய்யும் போது காந்த துண்டுதலுக்கு உள்ளாகும். இதன் வெளிப்பாடாக பல ஆப்ரேஷன் எர்ரஸ் நிகழும் மற்றும் இதனால் பொதுவான சாதனங்களை காட்டிலும் இவைகள் மெதுவாக இயங்கும். எனவே ஒரு ஸ்வைப் மெஷின் மிகவும் மெதுவாக செயல்படுகிறது என்றால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்டைலஸ்தனை இணைக்க அனுமதிக்காது.

ஸ்டைலஸ்தனை இணைக்க அனுமதிக்காது.

அனைத்து கட்டண டெர்மினல்களும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் அட்டையை ஸ்கேன் செய்த பிறகு கையொப்பம் உள்ளிட பயன்படுத்தும் ஒரு ஸ்டைலஸ் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு ஸ்கிம்மர் இணைக்கப்பட்ட சாதனமானது ஸ்டைலஸ்தனை இணைக்க அனுமதிக்காது.

சரி உங்களது பணத்தை பாதுகாக்க வேறு என்னென்ன வழிகள் உள்ளன.?

சரி உங்களது பணத்தை பாதுகாக்க வேறு என்னென்ன வழிகள் உள்ளன.?

- பொதுவான பண மோசடியில் இருந்து உங்களை பாதுகாக்க மிகச் சிறந்த வழி - ஒரு தனி டெபிட் அட்டையை வைத்திருப்பது தான். அது நீங்கள் வாங்குவதற்கு தேவைப்படும் தொகையை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.

மொத்த பணத்தையும் திருட மாட்டார்கள்

மொத்த பணத்தையும் திருட மாட்டார்கள்

சற்றும் எதிர்பாராத பணபரிமாற்றத்தை உடனடியாக கண்டறிய அட்டையை எஸ்எம்எஸ் வங்கி சேவையுடன் இணைக்கவும். ஒரு குறிப்பிட்ட பண வரம்புகளை அமைக்கவும்,மற்றும் பணம் திரும்பப் பெறும் அளவுகளை குறைக்கவும், குற்றவாளிகள் ஒரே நேரத்தில் உங்கள் மொத்த பணத்தையும் திருட மாட்டார்கள், முடியாது. நீங்கள் உங்கள் கார்டை இழந்துவிட்டால், அதை யாராவது கைப்பற்றி விவரங்களைக் கற்பதற்கு முன்பே உடனடியாக உங்கள் வங்கியை அணுகவும், அட்டையை பிளாக் செய்யவும்.

இழப்பீட்டுத் தொகை

இழப்பீட்டுத் தொகை

உங்கள் வங்கியின் அட்டை காப்பீடு திறன்களையும் விதிமுறைகளையும் பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள். சில கடன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மோசடியில் சிக்கினால் இழப்பீட்டுத் தொகையைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளன.

கண்பார்வையில் இருந்து

கண்பார்வையில் இருந்து

ஒரு கடையில் ஸ்வைப் நிகழ்த்தும்போது அதன் ஊழியர்கள் உங்கள் கண்பார்வையில் இருந்து உங்கள் அட்டையை தூரமாக எடுத்துசெல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக உணவகத்தில் அட்டைகளை பில்களுடன் வைத்து கொடுத்து அனுப்புவதை முற்றிலுமாக தவிருங்கள்.

பெயிட் அமவுண்ட்

பெயிட் அமவுண்ட்

உங்கள் அட்டை மூலம் பணம் செலுத்தியபின் கவனமாக ரசீதுகளைப் படியுங்கள். குறிப்பாக செலுத்தப்பட்ட தொகை (பெயிட் அமவுண்ட்) துறையானது காலியாக இருக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னர் நகருங்கள்.

புகைப்படங்கள் : மைபிராட்பேண்ட், இன்ஜெனிகோ (Ingenico)

Best Mobiles in India

Read more about:
English summary
This Is What You Should Know When Paying With Your Credit Card. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X