ஆராரோ ஆரிரரோ., தாயாக மாறும் டிஜிட்டல் சாதனம்: நிம்மதியா தூங்கனுமா அப்போ இதான் ஒரே வழி.!

|

இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி நம் மனநிலையை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என சிலருக்கு தோன்றியிருக்கலாம், ஆனால் இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுத்தவும் திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

மனநிலையை மாற்றிக் கொள்ளலாம்

மனநிலையை மாற்றிக் கொள்ளலாம்

குறிப்பாக இந்த சாதனம் தலையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு
நீங்கள் என்ன விதமான மனநிலையில் இருக்க விரும்புகிறீர்களோ அதற்கேற்றவாறு இந்த சாதனத்தில் பதிவு செய்து உங்கள்
மனநிலையை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கத்திற்கான மனநிலையை உண்டாக்க முடியும்

தூக்கத்திற்கான மனநிலையை உண்டாக்க முடியும்

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தூங்க வேண்டும் என நினைப்பவர்கள், இதைக் கொண்டு தூக்கத்திற்கான மனநிலையை உண்டாக்க முடியும், மேலும் விழிப்புடன் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த விரும்புகிறீர்களா, அதையும் செய்து கொள்ளலாம், இப்படி எந்தவிதமாக வேண்டுமானலும் நம் மனநிலையை மாற்றிக்கொள்ளலாம்.

இப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கைஇப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கை

 எப்படி மாற்றமுடியும்

இந்த புத்தம் புதிய சாதனத்தை வடிவமைத்த நிறுவனத்தின் பெயர் ஹப்பீ(hapbee). இருந்தபோதிலும் சிலருக்கு மனநிலையை
ஒரு சாதனத்தைக் கொண்டு எப்படி மாற்றமுடியும் என்ற கேள்வி எழும்.

அதிர்வெண்

இந்த கேள்விக்கு அந்த நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால், காப்புரிமை பெற்ற எலக்ட்ரோ மின்காந்த அதிர்வெண்களை வெளியிடும் தொழில்நுட்பம் ஒன்றைப் பயன்படுத்தித்தான் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காந்தப்புலமானது 0-22kHZ வரையிலான அதிர்வெண்களை வெளியிடுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

மின்காந்த அதிர்வெண்

மின்காந்த அதிர்வெண்

மேலும் குறிப்பிட்ட அளவு மின்காந்த அதிர்வெண்களை வெளியிடுவதன் மூலம் நாம் நம் மனதிற்குப் பிடித்தமான மனநிலையை மாற்றிக்கொள்ள முடியும். இதைத் தவிர வேறு எந்த ரசாயனமும் பயன்படுத்தப்படவில்லை எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்வெண் வெளியீட்டை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்

அதிர்வெண் வெளியீட்டை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்

பின்னர் இந்த சாதனத்திற்கான செயலியை நம் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதன் மூலம் நாம் எந்த மனநிலையில் இருக்க விரும்புகிறோமோ, அந்த அளவிற்கான மின்காந்த அதிர்வெண் வெளியீட்டை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

ஹப்பீ நிறுவனம்

ஹப்பீ நிறுவனம்

கடந்த 15வருடங்களாக ஆராய்ச்சி செய்து இந்த சாதனத்தை வடிவமைத்துள்ளதாக ஹப்பீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு, மே மாதம் இது விற்பனைக்கு வரக்கூடும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக் மதிப்பில் 359 டாலர்

அமெரிக் மதிப்பில் 359 டாலர்

குறிப்பாக இந்த சாதனத்தின் விலை சற்று அதிகமாதான் இருக்கிறது, அதன்படி ஹப்பீ நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஒரு சாதனத்தின் விலை அமெரிக் மதிப்பில் 359 டாலர் ஆக உள்ளது (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,900-ஆக உள்ளது).

Most Read Articles
Best Mobiles in India

English summary
This Electric Device Control your Feelings : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X