மிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே.! அலெஃக்ஸா ஓரம்போ.!
லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே விரைவில் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்குமென்று செய்தி வெளியாகியுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் சேவையுடன் இயங்கும் லெனோவா ஸ்மார்ட்
லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மிரட்டலான லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே விரைவில் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்குமென்று செய்தி வெளியாகியுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் சேவையுடன் இயங்கும் லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே பல அட்டகாசமான சேவைகளுடன் வருகிறது.
பிறநாட்டுச் சந்தையில் லெனோவா நிறுவனம் தற்பொழுது அதன் சலுகையை அறிவித்துள்ளது. மிக விரைவில் இந்திய சந்தையிலும் லெனோவா நிறுவனம் இந்தச் சலுகையை வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளேயின் அட்டசமான டிசைன் மற்றும் தொடரும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

10' இன்ச் லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே
10' இன்ச் எச்.டி டிஸ்பிளேயுடன் விற்பனையில் கிடைக்கும் லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே தற்பொழுது 36% சலுகை விலையில் பிற நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 249 டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே தற்பொழுது வெறும் 159 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியா சந்தையில் தற்போது சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் அஸ்சிஸ்டனட்
லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே 10' இன்ச் டிஸ்பிளே மற்றும் 8' இன்ச் டிஸ்பிளே என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளே இல் வாய்ஸ் அஸ்சிஸ்டனட், வாய்ஸ் கமாண்ட், ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் கேமரா போன்ற அணைத்து சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

பிரைவசி ஷட்டர்
முக்கியமாக எந்த ஒரு டிஸ்பிளே அசிட்டேன்ட காட்ஜெட்களிலும் இல்லாத ஒரு முக்கிய பாதுகாப்பு சேவையை லெனோவா அறிமுகம் செய்துள்ளது. உங்கள் லெனோவா ஸ்மார்ட் டிஸ்பிளேயில் உள்ள 5 மெகா பிக்சல் கேமராவுக்கு பிரைவசி ஷட்டர் வழங்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களின் கேமராவை முடிவைத்துக்கொள்ளலாம்.

கூகுள் அசிஸ்டன்ட்
கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் உங்களின் வேலைகளை எளிதில் முடித்து விடுகிறது. ஸ்மார்ட் ஹோம் சேவைகளுடன், வீடியோ, பாடல்கள், டாக்ஸி புக் செய்வது, ஏசி மற்றும் விளக்குகள் என நீங்கள் சொல்லும் அனைத்துச் சேவைகளையும் உடனே செய்து முடிந்துவிடுகிறது.


Click it and Unblock the Notifications