பட்ஜெட் விலையில் இந்தியாவின் முதல் 4கே ரெடி டிவி அறிமுகம்.!
4கே ரெடி டிவி மாடல் குவாட்-கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் செயலியைக் கொண்டுள்ளது, பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக சியோமி, சாம்சங், டிசிஎல், எல்ஜி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது, தற்சமயம் அந்நிறுவனங்களுக்கு போட்டியாக கிளவுட்வாக்கர் டெக் ஸ்டார்ட்-அப் என்ற நிறுவனம் முதல் 4கே ரெடி முழு எச்டி டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் இந்த 4கே ரெடி டிவி மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 4கே ரெடி டிவி மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

4கே ரெடி டிவி :
கிளவுட்வாக்கர் டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த முழு எச்டி டிவி 32 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலி:
4கே ரெடி டிவி மாடல் குவாட்-கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் செயலியைக் கொண்டுள்ளது, பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த டிவி மாடல்.

வயர்லெஸ் மீடியா
இந்த டிவி மாடலின் மற்ற சிறப்பம்சங்கள் என்னவென்றால் வயர்லெஸ் மீடியா மூலம் மொபைலில் இருக்கும் தரவுகளை டிவி திரையில்
எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளவுட் டிவி எக்ஸ்2 மாடலில் டிஸ்கவரி இன்ஜின்
கொண்டிருக்கிறது, இது பல மணி நேரங்கள் ஓடக்கூடிய வீடியோக்களை பயனர் விருப்பத்திற்கு தகுந்தபடி வழங்கும்.

இணைப்பு ஆதரவுகள்:
பாக்ஸ் ஸ்பீக்கர்கள், மொபைல் ஸ்கிரீன் மிரரிங், எக்ஸ் லூமினஸ் டிஸ்ப்ளே, பில்ட்-இன்-வைஃபை, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் மூவி பாக்ஸ் செயலியை பயன்படுத்த வாழ்நாள் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:
இந்த 4கே ரெடி டிவி மாடல் மேம்படுத்தப்பட்ட புதிய சூப்பர் ரிமோட் இன்-பில்ட் ஏர் மவுஸ் மூலம் பாயின்ட் மற்றும் க்ளிக் நேவிகேஷன் வசதியை கொடுக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications