வானளாவிய கட்டிடங்களின் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் டிரோன்கள்..

குறிப்பாக உயரத்தை கண்டு பயப்படுபவர்கள் மற்றும் இதுபோன்ற கற்பனைக்கும் எட்டாதக திகிலூட்டும் வேலைகளை செய்பவர்களுக்கு டிரோன்கள் உதவியாக இருக்கக்கூடும்.

|

நம்மூரில் பொங்கலுக்கு வீட்டிற்கு வெள்ளை அடிக்க ஏணியில் ஏறச் சொன்னாலோ, அவவ்ளவு உயரத்திற்கெல்லாம் ஏறி சுண்ணாம்பு அடிப்பதெல்லாம் ஆகாத காரியம் நைஸாக நழுவி விடுவோம். அதுவே பல மாடி கட்டணம் என்றால் சொல்லவாவேண்டும். ஆனால் 50 மாடி, 100 மடி என வானளாவிய கட்டிடங்கள், அதுவும் கண்ணாடியிலான வெளிப்புறத்தை கொண்ட கட்டிடங்களில், அந்த கண்ணாடி ஜன்னல்களை அவ்வளவு உயரத்தில் தொங்கிக்கொண்டு சுத்தம் செய்வதை நினைத்துப் பார்த்தாலே கிலி உண்டாகிறது அல்லவா.

வானளாவிய கட்டிடங்களின் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் டிரோன்கள்..

குறிப்பாக உயரத்தை கண்டு பயப்படுபவர்கள் மற்றும் இதுபோன்ற கற்பனைக்கும் எட்டாதக திகிலூட்டும் வேலைகளை செய்பவர்களுக்கு டிரோன்கள் உதவியாக இருக்கக்கூடும். ஜன்னல் சுத்தம் செய்யும் மனிதர்களுக்கு மாற்றாக இந்த டிரோன்களை வடிவமைத்துள்ளது லாட்வியாவை சேர்ந்த ஏரோன்ஸ் எனும் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் அதி திறன் வாய்ந்த மற்றும் அதிக எடையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிரோனான ஏடி28 இதற்கு பயன்படுத்தப்படுகிறது. நிலத்திலிருந்து டிரோனுடன் இணைக்கப்பட்ட குழாய் வழியாக தண்ணீர் வருகிறது. வானளாவிய கட்டிடங்கள் எனில் விதிவிலக்காக மிகநீண்ட குழாய்கள் தேவைப்படலாம்!.

காற்றாலைகளின் பனியை நீக்குவது மற்றும் பூச்சு பூசும் டிரோன், தொழிற்சாலை கோபுரங்களை சுத்தம் செய்யும் டிரோன் உள்ளிட்ட கனகர டிரோன்கள் தயாரிப்பிற்கு பெயர்பெற்றது ஏரோன்ஸ் நிறுவனம்.


அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்க ஒரு சுவாரஸ்யமான ஷோவை தருவதை காட்டிலும் வேறு சிறப்பான பணிகளையும் செய்கிறது. அதிலும் குறிப்பாக இது பாதுகாப்பான முறையாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக ஜன்னல் சுத்தம் செய்யும் முறையானது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒன்று என்பதில் ஆச்சர்யமில்லை. கண்ணாடிகளை சுத்தம் செய்யும் மனிதர்களை காட்டிலும் இந்த டிரோன்கள் வேகமாக பணியை செய்துமுடிக்கும் என உறுதியளிக்கிறது ஏரோன்ஸ்.


எனினும் ஜன்னல் சுத்தம் பணியில் நாம் நினைப்பது போல அதிக மரணங்கள் நிகழ வாய்ப்பில்லை. கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வலுவான தொழிற்சங்களை காரணமான கடந்த சில தசாப்தங்களாகவே காயமடைதல் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. டாக்ஸி டிரைவர் பணியை விட ஜன்னல் சுத்தம் செய்யும் பணி பாதுகாப்பானது என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

வானளாவிய கட்டிடங்களின் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் டிரோன்கள்..

ஆனாலும் இந்த டிரோன்கள் ஜன்னல் சுத்தம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படாமல், உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது இதன் தீயை அணைக்கவும் இவை உபயோகமாக இருக்கும் என ஏரோன்ஸ் நிறுவனம் கூறுகிறது. எனவே இந்த டிரோன்கள் பயன்பாட்டால் நிச்சயம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்பது நிதர்சனம்.
Best Mobiles in India

English summary
These Window-Cleaning Drones Make Cleaning Skyscrapers Look Easy : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X