2020 ஆம் ஆண்டில் அறிமுகமான மிகவும் விலையுயர்ந்த கேஜெட்டுகள் இவை தான்.!
சாம்சங், சியோமி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த ஆண்டு குறைந்த அளவு சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்தன. குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக அதிக கேஜெட்டுகள் அறிமுகம் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் பல நிறுவனங்கள் தங்களது தனித்துவமான கேஜெட்டுகளை சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்துள்ளன. அதன்படி இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விலையுயர்ந்த கேஜெட்டுகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 2
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி இசட் ஃபோல்ட் 2 மாடலை அறிமுகம் செய்தது. ஆனாலும் இந்த சாதனத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி சாதனம் ஆனது 7.6-இன்ச் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2208 x 1768 பிக்சல் திர்மான கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் 6.23 கவர் டிஸ்பிளே வசதியும் இவற்றுள் அடக்கம், எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகக இருக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக இந்த புதிய சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் 10எம்பி கேமரா உட்பட மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்
ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனம் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த சாதனத்தில் பேட்டரியில் குறைபாடுகள் இருப்பதாக தகவல் வெளியானது. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.7 இன்ச் 2778×1284 பிக்சல் தீர்மானமும் ஓஎல்இடி டிஸ்ப்ளே வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே ஆகும். இந்த மாடலானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இது ஐஓஎஸ் 14 மூலம் இயக்கப்படுகிறது. இதில் டூயல் சிம் ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டுக்காக ஐபி68 வசதி உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி ஐபோன் 12 ப்ரோ மேக்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் ஆதரவைக் கொண்ட ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.1,59,990-ஆக உள்ளது.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அருமையான ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒவர்-இயர் டிசைன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் ஆப்பிள் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட 40எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் ஹெச்1 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிரத்யேக அகௌஸ்டிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் ஹெட்பேண்ட் பிரேம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இது வளையும் தன்மை மற்றும் தலையில் அணிந்திருக்கும் போது அதிக சவுகரியத்தை வழங்குகிறது. ஹெட்போனில் வழங்கப்பட்டு உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு வால்யூம், பிளேபேக், அழைப்புகளை ஏற்பது மற்றும் நிராகரிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். மேலும் இதில் அடாப்டிவ் இகியூ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆடியோ கேட்கும் போது வெவ்வேறு வசதிகளை வழங்குகிறது. மேலும் இந்த சாதனத்தின்
விலை ரூ.59,900-ஆக உள்ளது.

ஏலியன்வேர் எம் 15 ஆர் 3 கேமிங் லேப்டாப்
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஏலியன்வேர் எம் 15 ஆர் 3 கேமிங் லேப்டாப் மாடல் ஆனது சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் ஆனது இன்டெல் கோர் i9 10980HK ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும்GEFORCE RTX 2080 Super MAXQ கிராஃபிக் கார்டு, 32GB DDR4 ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். பின்பு 15.6-இன்ச் டிஸ்பிளே மற்றும் 3840 x 2160 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஏலியன்வேர் எம் 15 ஆர் 3 கேமிங் லேப்டாப் மாடலின் விலை ரூ.3,39,990-ஆக உள்ளது.

கோப்ரோ ஹீரோ 9 பிளாக்
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கோப்ரோ ஹீரோ 9 பிளாக் எனப்படும் கேமரா ஆனது பல்வேறு ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. கோப்ரோ ஹீரோ 9 பிளாக் ஆனது 23.6 மெகாபிக்சல் சென்சார், 5கே வீடியோ பதிவு செய்யும் ஆதரவு, எல்இடி டிஸ்பிளே, HyperSmooth 3.0 தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.49,500-ஆக உள்ளது.

டைசன் Pure Hot
ஹெவி-டூட்டி மோட்டார்கள் மற்றும் vacuum கிளீனர்கள், ஏர் பியூரிஃபையர்கள் மற்றும் ஹேர் ட்ரையர்கள் போன்ற பொதுவான வீட்டு தயாரிப்புகளுக்கு டைசன் நிறுவனத்தை தான் மக்கள் அதிகம் தேர்வுசெய்கின்றனர். மேலும் இந்நிறுவனம் அண்மையில் தனது புதிய பிரீமியம் ஏர்-பியூரிஃபையர் மற்றும் ஹீட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. டைசன் ப்யூர் ஹாட் என்று அழைக்கப்படும் இந்த சாதனம் ரூ.61,900-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது முதல் வகையான காற்று சுத்திகரிப்பு இயந்திரமாகும். மேலும் பல்வேறு சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.

Devialet Phantom கோல்ட் 4500 வாட் ஸ்பீக்கர்
Devialet Phantom கோல்ட் 4500 வாட் ஸ்பீக்கர் ஆனது தனித்துவமான ஆடியோவை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சக்திவாய்ந்த 7.1 சரவுண்ட் அமைப்புகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். குறிப்பாக இந்த சாதனத்தை அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும். பின்பு இதன் விலை ரூ.2,88,900-ஆக உள்ளது.

சாம்சங் கியூஎல்இடி 8கே டிவி
வீட்டில் தியேட்டர் அனுபவத்தை கொண்டுவர சாம்சங் நிறுவனம் தனது கியூஎல்இடி 8கே டிவி மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஆண்டு நான்கு கியூஎல்இடி 8கே டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, அதன்படி 65-இன்ச மாடலின் விலை ரூ.4.99 லட்சம், 75-இன்ச் மாடலின் விலை ரூ.9.99 லட்சம், 82-இன்ச் மாடலின் விலை ரூ.14.29 லட்சம், 85-இன்ச் மாடலின் விலை ரூ.15.79 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளில் சுமார் 33 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய பேனல்கள் உள்ளன, மேலும் அவை சரவுண்ட்-சவுண்ட் ஆடியோ அமைப்பைக் கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications