Home
Gadgets

இது ஸ்மார்ட் வாட்ச் இல்லை.! ஸ்மார்ட்போன் தான் | பியூட்சர் ஸ்மார்ட்போன் கை கடிகாரம்.!

உங்களின் அடுத்த பியூட்சர் ஸ்மார்ட்போன் உங்கள் மணிக்கட்டில் அணிந்து கொள்ளலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

By Sharath

உங்களின் அடுத்த பியூட்சர் ஸ்மார்ட்போன் உங்கள் மணிக்கட்டில் அணிந்து கொள்ளலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் ஸ்மார்ட் வாட்ச் போன்று கையில் அணிந்துகொள்ளும் பிரத்தியேக ஸ்மார்ட்போன் ஒன்றைச் சீன நிறுவனம் உருவாகியுள்ளது.

இது ஸ்மார்ட் வாட்ச் இல்லை.! ஸ்மார்ட்போன் தான் | பியூட்சர் ஸ்மார்ட்போன்

சீன தொலைப்பேசி உற்பத்தியாளரான நுபியா ஒரு முன்மாதிரி சாதனம் ஒன்றை ஐ.எப்.ஏ விழாவில் வெளியிட்டுள்ளது, இந்தச் சாதனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் வடிவமைப்பை ஒப்பிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது.

நுபியா ஆல்ஃபா

நுபியா ஆல்ஃபா

நுபியா ஆல்ஃபா என்று அழைக்கப்படும் இந்த புதிய சாதனத்தை, உலகின் மேம்பட்ட முதல் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட்போன் என நூபியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பல கெட்ஜெட் பயிர்களின் ஸ்கை ஃபை கனவுகளை இந்த நூபியா ஆல்பா நிறைவேற்றியுள்ளது என்றே சொல்லவேண்டும்.

"ஃப்ளெக்ஸ்" திரை

நுபியா ஆல்ஃபா, நிறுவனத்தின் பிரத்தியேக "ஃப்ளெக்ஸ்" திரை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தத் திரை பெரிய ஆர்கானிக் எல்.ஈ.டி திரை என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த நுபியா ஆல்ஃபா, உங்கள் விறல் நுனியில் ஸ்மார்ட்போன்ற்கான அனைத்துப் பயன்பாட்டு சேவைகளையும் உங்களுக்கு வழங்குகிறது.

மெட்டல் ஸ்ட்ராப்

மெட்டல் ஸ்ட்ராப்

ஃப்ளெக்ஸ் திரை ஒரு பிளாஸ்டிக் கேஸ் இணைப்புடன், பாரம்பரிய கைக்கடிகாரம் போன்ற மெட்டல் ஸ்ட்ராப் இணைப்புகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கைக்குக் கச்சிதமாய் பொருந்தும் ஸ்மார்ட்போனாக உருவம் எடுத்துள்ளது.

ஸ்மார்ட்போன் சேவை

ஸ்மார்ட்போன் சேவை

நுபியா ஆல்ஃபா வில் 4ஜி தரவரிசையில் வாய்ஸ் கால்ஸ் செய்யும் வசதி, ஆரோக்கிய தகவல்களைச் சேகரிக்கும் சேவை, செலஃபீ மற்றும் வீடியோ கால்லிங்கான சிறந்த கேமரா சேவை என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன் சேவைகளை அப்படியே உங்களுக்கு வழங்குகிறது.

ஐ.எப்.ஏ விழா

ஐ.எப்.ஏ விழா

ஐ.எப்.ஏ விழாவில் நுபியா ஆல்ஃபா அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இதன் திரை விகிதம், என்ன வகை சிப் செட், என்ன வகை பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது போன்ற விபரக்குறிப்புகளை நிறுவனம் வெளியிடவில்லை. வரும் வாரத்தில் இன்னம் சில பிரத்தியேக மாற்றங்களை நுபியா ஆல்ஃபா வில் மேற்கொள்ளப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் முழு விபரக்குறிப்புகள் வெளியிடப்படும் என்று விழாவில் நுபியா நிறுவனம்தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் நுபியா ஆல்ஃபா

உலக சந்தையில் நுபியா ஆல்ஃபா

இந்த ஆண்டின் இறுதிக்குள் நிச்சயம் உலக சந்தையில் நுபியா ஆல்ஃபா விற்பனைக்கு வரும் என்று நுபியா நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன் விலை ஸ்மார்ட்போன் விலை பட்டியலின் கீழ் உள்ள விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் 1,000 டாலர் க்கு மேல் தான் நுபியா ஆல்ஃபா விற்பனைக்கு வரும் என்று கெட்ஜெட்டீஸ் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
The smartphone of the future Chinese firm releases 'wearable phone' that wraps around your wrist The flexible phone you can wrap around your wrist : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X