கையடக்க "டால்ஃபி" வாஷிங் மெஷின் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
இந்தத் தீபாவளிக்கு புதிய வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?
இந்தத் தீபாவளிக்கு புதிய வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அப்ப இத கொஞ்சம் படிங்க, பெரிய சைஸ் வாஷிங் மெஷின் வாங்குவதற்குப் பதிலாக கை அடக்க வாஷிங் மெஷின் வாங்கி ட்ரை செஞ்சி பாருங்களேன்.
சரி, இனிமேல் வாஷிங் மெஷின் உங்கள் கைக்குள் அடங்குமென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே நம்புங்க. டால்ஃபி என்னும் கை அடக்க வாஷிங் மெஷினினை உலக காட்ஜெட் சந்தையில் ஒரு முன்னணி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த கை அடக்க காட்ஜெட் இனி உங்களின் வாஷிங் மெஷின் ஆகா செயல்படும். அல்ட்ரா சவுண்ட் அலைவரிசை தொழிநுட்பத்தில் இயங்கும் இந்த புதிய காட்ஜெட் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த டால்ஃபி டிவைஸ் ரீயூசப்பில் காட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களின் சிங்க் இல் தண்ணீர் நிரப்பி கொஞ்சம் சோப்பு சேர்த்து, அழுக்கு துணிகளை அதில் ஊற வைத்து டால்ஃபி டிவைஸ்ஸை அதில் மூழ்கச் செய்து ஒன செய்துவிட்டு 30 நிமிடம் காத்திருந்தாள் மட்டும் போதும்.

உங்களின் ஆடைகள் அனைத்தும் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. வாஷிங் மெஷின்ற்கு பயன்படும் மின்சார அளவு மற்றும் தண்ணீரின் அளவை விட டால்ஃபி டிவைஸ் இல் குறைவாக செலவிடப்படுகிறது.
எந்த விதமான துணிகளுக்கு இந்த புதிய டால்ஃபி டிவைஸ் பயன்படுத்தலாம், இத்துடன் துணிகளின் நிறம், தரம் மற்றும் அதன் இயல்பு நிலை ஏதும் பாதிக்காமல் பாதுகாப்பாக இந்த டிவைஸ் சுத்தம் செய்கிறது. சந்தையில் டால்ஃபி டிவைஸ் இன் விலை 189 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.14,000 என்பது குறிப்பித்தக்கது.


Click it and Unblock the Notifications