இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, மேலும் விரைவில் வைஃபை மூலம் இயங்கக்கூடிய ஸ்மார்ட் ஜன்னல் அனைத்து இடங்களிலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஜன்னலின் முக்கிய அம்சம் பொறுத்தவரை நிறம் மாறக்கூடிய தன்மை கொண்ட கண்ணாடி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை மூலம் இயங்கக்கூடிய ஸ்மார்ட் ஜன்னல் பொறுத்தவரை உணரும் தன்மை கொண்ட சென்சார்களை கொண்டுள்ளது, எனவே வெளியே நிலவும் வெப்பநிலை, ஆட்களின் எண்ணிக்கை போன்றவற்றை உணர்ந்து அதற்கேற்ப கண்ணாடியின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் அம்சத்தைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஜன்னலுக்கு ஸ்கீரின் போன்றவை எதுவும் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர், அதன்பின்பு இவற்றில் இடம்பெற்றுள்ள 'டைனமிக் கிளாஸ்' எனும் கண்ணாடியின் நிறத்தை மாற்ற வைஃபை மற்றும் ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட் ஜன்னலில் மின்னணுத் திரை போன்ற பிலிமை பயன்படுத் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஜன்னல் சுவிட்ச் அல்லது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கமுடியும்.

இந்த ஸ்மார்ட் ஜன்னலை அழகுபடுத்துவதற்கு ஸ்மார்ட் டிண்ட் பிலிம் போன்ற பல்வேறு அம்சங்களும் உள்ளது, மேலும் இந்த ஜன்னல் நாடு முழுவதும் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் ஜன்னல் கண்ணாடிகள் சற்று கூடுதலான விலையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இருந்தபோதிலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ஜன்னல்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.