ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் வெளிவந்த புது itel Tablet டிவைஸ்! பார்க்க Xiaomi Pad மாதிரியே இருக்கே!
பட்ஜெட் விலையில் ஒரு சிறிய டிஸ்பிளே கொண்ட புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க விரும்பும் நபர்கள் இப்போது, பெரிய டிஸ்பிளேவுடன் செயல்படும் டேப்லெட் சாதனங்களை வாங்க ஆசை படுகின்றனர். அந்த வரிசையில் அறிமுகமாகியிருக்கும் சாதனம் தான் iTel Pad 1 டிவைஸ்.
குறைந்த விலையில் மிகப் பெரிய டிஸ்பிளேவுடன், சூப்பர் பிக் சைஸ் பேட்டரி உடன், அட்டகாசமான ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை வழங்கும் ஒரு மிரட்டலான சாதனமாக இந்த புதிய itel Pad 1 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவை தளமாகக் கொண்ட itel நிறுவனம் இப்போது, itel Pad 1 என்ற நிறுவனத்தின் முதல் டேப்லெட் (Tablet) சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Xiaomi Pad சாயலில் காட்சியளிக்கும் itel Pad 1 டேப்லெட்.!
இந்த டேப்லெட் சாதனம், ஒரு சாயலில் பார்ப்பதற்கு சியோமியின் டேப்லெட் சாதனம் போல காட்சியளிக்கிறது. இந்த டேப்லெட் சாதனம் வட்ட விளிம்புகள் மற்றும் ஒரு பெரிய கேமரா அமைப்புடன் பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு பிரைமரி கேமரா மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐடெல் பேட் 1 இன் முக்கிய விவரக்குறிப்புகள், குறுகிய பெசல்களுடன் கூடிய பெரிய 10.1-இன்ச் டிஸ்ப்ளேயாகும்.
அடுத்தபடியாக, டெக் பிரியர்களை கவரும் வகையில் இதன் பேட்டரி அமைந்துள்ளது. இந்த டேப்லெட் 6,000mah கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. இது 4ஜி எல்டிஇ இணைப்பு, பேஸ் அன்லாக்கிங் போன்றவற்றை ஆதரிக்கிறது. இந்த புதிய ஐடெல் பேட் 1 சாதனம் SC9863A1 என்ற சக்தி வாய்ந்த சிப்செட்டுடன் செயல்படுகிறது. இதன் சாப்ட்வேர் பற்றிப் பேசுகையில், இது ஆண்ட்ராய்டு 12 (Go Edition) ஐ அவுட்-ஆப் தி பாக்ஸ் உடன் பெறுகிறது.

itel Pad 1 டிஸ்பிளே மற்றும் சிப்செட் விபரம்.!
itel Pad 1 ஆனது 1280X800 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் மெலிதான பெசல்களுடன் கூடிய 10.1' இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட SC9863A1 ஆக்டா-கோர் சிப்செட்டுடன் சிறப்பாக இயக்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்திற்காக இதில் 512GB வரை விரிவாக்கக்கூடியது SD கார்டு வசதியும் உளள்து. இது 10W சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரியில் இயங்குகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, itel Pad 1 ஆனது 80 டிகிரி வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8MP பின்பக்க கேமராவையும், ஃபிளாஷ் கொண்ட முன்பக்கத்தில் 5MP AF கேமராவையும் கொண்டுள்ளது. டேப்லெட்டில் டூயல் ஸ்பீக்கர்கள், 3.5mm ஆடியோ ஜாக், 4G ஆதரவு (வாங்குபவர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பலாம் மற்றும் குரல் அழைப்புகள் செய்யலாம்), WiFi, OTG (பயனர்கள் OTG உடன் வெளிப்புற சாதனங்களுடன் டேப்லெட்டை இணைக்கிறார்கள்) மற்றும் புளூடூத் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
itel Pad 1 விலை என்ன?
இந்தியாவில் itel Pad 1 விலை மற்றும் விற்பனை தேதியைப் பற்றி பேசுகையில், இந்த புதிய itel PAD 1 சாதனம் இந்திய சந்தையில் வெறும் ரூ.12,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டீப் கிரே மற்றும் லைட் ப்ளூ வண்ணங்களில் வருகிறது. இந்த டேப்லெட்டை மக்கள், ஐடெல் ஸ்டோர்ஸ் மற்றும் ஆன்லைன் வழியாக வாங்கலாம். சில சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து ஆஃப்லைனில் வாங்கவும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








