இந்தியாவில் வாங்கச் சிறந்த விலையுயர்ந்த ஸ்மார்ட் டிவிகள்.!

|

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் டிவி மாடல்கள் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளன என்றுதான் கூறவேண்டும். மேலும் சாம்சங், சியோமி, சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்கள் விலை உயர்வான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளன. பின்பு இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளும் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விலை உயர்வான ஸ்மார்ட் டிவிகள் கணினியில் உள்ள சில அம்சங்களையும்

குறிப்பாக விலை உயர்வான ஸ்மார்ட் டிவிகள் கணினியில் உள்ள சில அம்சங்களையும் கொண்டுள்ளன என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது இந்தியாவில் வாங்கக் கிடைக்கும் சற்று விலை உயர்வான ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

சோனி பிராவியா A9F

சோனி பிராவியா A9F

சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனத்தின் சோனி பிராவியா A9F ஸ்மார்ட் டிவி மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனதம் 65-இன்ச் அல்ட்ரா எச்டி (4கே) ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 98 வாட் சவுண்ட் அவுட்புட், 100 Hz Refresh Rate உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.


4கே எச்டிஆர் ப்ராசஸர் எக்ஸ் 1 அல்டிமேட் வசதி, ஆண்ட்ராய்டு இயங்குதளம், எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சோனி பிராவியா A9F மாடல். மேலும் நெட்ஃபிக்ஸ், டிவி கேமரா, அமேசான் வீடியோ, கூகிள் பிளே மூவி மற்றும் யூடியூப், கூகிள் ப்ளே மியூசிக், கூகிள் பிளே கேம்ஸ் என பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.4,69,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் சலுகைகள் கிடைக்கும்.

தண்ணீர்பாட்டில் விற்பனை: அம்பானியை பின்னுக்கு தள்ளிய ஷான்ஷன்- ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடம்!தண்ணீர்பாட்டில் விற்பனை: அம்பானியை பின்னுக்கு தள்ளிய ஷான்ஷன்- ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடம்!

சாம்சங் சீரிஸ் 8

சாம்சங் சீரிஸ் 8

75-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட சாம்சங் சீரிஸ் 8 மாடல் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.5,99,900-விலையில் வாங்க முடியும். மேலும் 3840 x 2160 பிக்சல் தீர்மானம், Tizen ஓஎஸ், 40 வாட் சவுண்ட் அவுட்புட், 200 Hz Refresh Rateஉள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

சாம்சங் சீரிஸ் 8 மாடல் எச்டிஆர் 10+ தொழில்நுட்பம் மற்றும் டைனமிக் கிரிஸ்டல் கலர் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் என பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தமுடியும்.

டிசிஎல் 85-இன்ச் ஸ்மார்ட் டிவி

டிசிஎல் 85-இன்ச் ஸ்மார்ட் டிவி

டிசிஎல் 85-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே QLED ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 30 வாட் சவுண்ட் அவுட்புட், 60 Hz Refresh Rate,உள்ளிட்ட சிறப்பான ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

குறிப்பாக க்ரோம் காஸ்ட், கூகுள் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட ஆதவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. அதேபோல் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை பயன்படுத்த முடியும். பின்பு எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட்கள் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.2,49,999-விலையில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

எல்ஜி சிஎக்ஸ் ஸ்மார்ட் டிவி

எல்ஜி சிஎக்ஸ் ஸ்மார்ட் டிவி

எல்ஜி சிஎக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 65-இன்ச் டிஸ்பிளே வசதி, 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 40 சவுண்ட் அவுட்புட், 120 Hz Refresh Rate உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக Alpha9 Gen3 AI பிராசஸர் 4கே வசதி, கூகுள் அசிஸ்டெண்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,64,990-விலையில் எல்ஜி சிஎக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க முடியும்.

 மி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி

மி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.60,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக
இந்த சாதனத்தை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும்.

இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 65-இன்ச் டிஸ்பிளே, 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 20 வாட் சவுண்ட் அவுட்புட், 60 Hz Refresh Rate உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு MTK Cortex A55 குவாட்-கோர் பிராசஸர் வசதி, 2ஜிபி ரேம்
மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் மி 4எக்ஸ் ஸ்மார்ட் டிவியில் டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உட்பட பல்வேறு முக்கியமான செயலிகளை பயன்படுத்த முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The most expensive TVs in india: Here is the list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X