இந்தியாவில் வாங்கச் சிறந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.!

|

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எல்ஜி, சாம்சங், ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்களும் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

75-இன்ச் ஸ்மார்ட்

இந்தியாவில் 55-இன்ச் மற்றும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகளைவாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை சற்று உயர்வாக இருக்கும் என்று
தான் கூறவேண்டும். இப்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி Mi QLED TV 75

சியோமி Mi QLED TV 75

சியோமி Mi QLED TV 75-இன்ச் மாடல் ஆனது 4கே வசதி கொண்ட ஸ்மார்ட் டிவி ஆகும். இது ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. இதுதவிர நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற தளங்களில் HDR உள்ளடக்க ஸ்ட்ரீமிங்கை இயல்பாக ஆதரிக்கிறது. மேலும் பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். இந்தியாவில் சியோமி Mi QLED TV 75 75-இன்ச் மாடலின் விலை ரூ.1,19,999-ஆக உள்ளது.

அட கடவுளே இதுபோன்ற மிருகங்களா 40,000 வருடங்களுக்கு முன்பாக உயிர் வாழ்ந்தன? கிடைத்தது ஆதாரம்.!அட கடவுளே இதுபோன்ற மிருகங்களா 40,000 வருடங்களுக்கு முன்பாக உயிர் வாழ்ந்தன? கிடைத்தது ஆதாரம்.!

சோனி பிராவியா  189.3 cm (75 inches) 4K Ultra HD Smart Certified Android LED TV 75X8000H

சோனி பிராவியா 189.3 cm (75 inches) 4K Ultra HD Smart Certified Android LED TV 75X8000H

சோனி பிராவியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இது சியோமி ஸ்மார்ட் டிவியை விட சற்று விலை உயர்ந்தது. ஆனாலும் மேம்பட்ட படத் தரத்தை வழங்குகிறது இந்த சோனி ஸ்மார்ட் டிவி. சோனி பிராவியா 189.3 cm (75 inches) 4K Ultra HD Smart Certified Android LED TV 75X8000H மாடலின் விலை ரூ.1,79,990-ஆக உள்ளது.

சாம்சங் 189 cm (75 inches) 4K Ultra HD Smart LED TV UA75TU8000KXXL

சாம்சங் 189 cm (75 inches) 4K Ultra HD Smart LED TV UA75TU8000KXXL

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் UA75TU8000KXXL 75-இன்ச் மாடல் ஆனது 4கே அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவேபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இருந்தபோதிலும் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியின் சற்று உயர்வாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். சாம்சங் 189 cm (75 inches) 4K Ultra HD Smart LED TV UA75TU8000KXXL மாடலின் விலை ரூ.1,94,900-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 2020-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி பிராவியா 189.3 cm (75 inches) 4K Ultra HD Smart Certified Android LED TV 75X9500H

சோனி பிராவியா 189.3 cm (75 inches) 4K Ultra HD Smart Certified Android LED TV 75X9500H

சோனி பிராவியா 189.3 cm (75 inches) 4K Ultra HD Smart Certified Android LED TV 75X9500H மாடல் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம், 30 வாட் சவுண்ட் அவுட்புட்,4எச்டிஎம் போர்ட், 2 யுஎஸ்பி போர்ட்,கூகுள் அசிஸ்டெண்ட், க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 4கே அல்ட்ரா எச்டி வசதி இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.2,99,900-ஆக உள்ளது..

எல்ஜி 189 cm (75 inches) 4K UHD Smart Nano-cell TV 75SM9400PTA

எல்ஜி 189 cm (75 inches) 4K UHD Smart Nano-cell TV 75SM9400PTA

எல்ஜி 189 cm (75 inches) 4K UHD Smart Nano-cell TV 75SM9400PTA சாதனம் ஆனது மற்ற ஸ்மார்ட் டிவிகளைவிட தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் நானோ-செல் பேனலைப் பயன்படுத்தும் பிரீமியம் 75 இன்ச் ஸ்மார்ட் டிவி தான் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி. இது ஐ.பி.எஸ் எல்.சி.டி பேனல் மற்றும் வழக்கமான ஸ்மார்ட் டிவிகளுடன் ஒப்பிடும்போது சிறந்த மாறுபாடு விகிதத்தையும் அதிர்வுத் தன்மையையும் வழங்குகிறது. மேலும் 40 வாட் சவுண்ட் அவுட்புட், 4எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த சாதனத்தின்விலை ரூ.3,09,990-ஆக உள்ளது.

சாம்சங் 190.5 cm (75 inches) 8 Series 75NU8000 4K LED Smart TV (Black)

சாம்சங் 190.5 cm (75 inches) 8 Series 75NU8000 4K LED Smart TV (Black)

சாம்சங் 190.5 cm (75 inches) 8 Series 75NU8000 4K LED Smart TV (Black) மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மற்ற ஸ்மார்ட் டிவிகளை அதிக அம்சங்களை கொண்டுள்ளதுஇந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக 3840 x 2160 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 40 வாட்சவுண்ட் அவுட்புட் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ள இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.5,99,900-ஆக உள்ளது.

 சாம்சங் (75) Q800T 8K Smart QLED TV

சாம்சங் (75) Q800T 8K Smart QLED TV

அதிநவீன அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது சாம்சங் (75) Q800T 8K Smart QLED TVமாடல். குறிப்பாக இது 8கே தெளிவுத்திறன் கொண்ட மிகப்பெரிய ஸ்மார்ட் டிவியாகும். அதேபோல் இது ஒரு அசத்தலான கியூஎல்இடி டிவி, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட் டிவியின் விலைரூ.6,99,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
The best 75-inch smart TVs to buy in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X