இந்தியாவில் வாங்கச் சிறந்த 55-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகள்.! விலை மற்றும் விவரங்கள்.!

|

இப்போது உலகம் முழுவதும் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகள் இருக்கும் ஸ்மார்ட் டிவிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

 தரமான ஸ்மார்ட் டிவி மாடல்களை அ

குறிப்பாக பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது சியோமி நிறுவனம். ஆனாலும் சியோமி நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் எல்ஜி,சாம்சங் போன்ற நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப வசதியுடன் ஸ்மார்ட் டிவிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இருந்தபோதிலும் மற்ற நிறுவனங்களை விட சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களில் இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் இப்போதுஇந்தியாவில் வாங்கச் சிறந்த 55-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

எல்ஜி 55BXPTA

எல்ஜி 55BXPTA

எல்ஜி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதை கைவிட்டாலும், சிறந்த ஸ்மார்ட் டிவிககளை உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்த எல்ஜி 55BXPTA மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது 55-இன்ச் ஒஎல்இடி 4கே பேனல் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், சிறந்த பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல்

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் 40 வாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆதரவுகள் உள்ளன. மேலும் gen α7 Gen3 பிராசஸர் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும். பின்பு எச்டிஎம்ஐ 2.1 போர்ட், கூகிள் அசிஸ்டெண்ட், அலெக்சா மற்றும் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், யூடியூப், ஜீ 5, ஆப்பிள் டிவி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பயன்பாடுகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். இந்த எல்ஜி 55BXPTA ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,24,999-ஆக உள்ளது.

எத்தனை வயது குழந்தைகளுக்கு., எப்படி ஆதார் கார்ட் எடுப்பது?- இதோ எளிய வழிமுறைகள்!எத்தனை வயது குழந்தைகளுக்கு., எப்படி ஆதார் கார்ட் எடுப்பது?- இதோ எளிய வழிமுறைகள்!

 சாம்சங் The Frame

சாம்சங் The Frame

சாம்சங் The Frame ஸ்மார்ட் டிவி மாடலுக்கு இந்தியாவில் ஒரு சில இடங்களில் நல்லவரவேறப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். அதாவது சுவரில் இருக்கும் ஒவியம் போல் தெரியும் இந்த புது வகை ஸ்மார்ட் டிவி. சாம்சங் The Frame எனப்படும் 55-இன்ச ஸ்மார்ட் டிவி ஆனது QLED டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,எச்டிஆர் 10+ ஆதரவு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல், லேன் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

மேலும் சிறந்த வடிவமைப்பு மற்றும் 40 வாட் ஸ்பீக்கர், தரமான பிரைட்ஸ்நஸ் வசதி, உள்ளிட் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஆட்டோ ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பம், கூகிள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்சா மற்றும் பிக்ஸ்பி போன்ற குரல் உதவியாளர்களுடன் வருகிறது இந்தஅட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு இந்த சாம்சங் The Frame மாடலின் விலை ரூ.76,999-ஆக உள்ளது.

  சோனி பிராவியா X7400H

சோனி பிராவியா X7400H

சோனி நிறுவனத்தின் ஒரு சில ஸ்மார்ட் டிவிகளுக்கு இப்போது கூட இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்த சோனி பிராவியா X7400H மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது 55-இன்ச் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சோனி பிராவியா X7400H மாடல். மேலும் 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, எச்எல்ஜி,ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சோனி ஸ்மார்ட் டிவி மாடல்.

குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் அவுட், ஆப்டிகல், லேன், புளூடூத் 4.2, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சோனி பிராவியா X7400H மாடல். அதன்பின்பு 4கே ஆதரவு, 20 வாட் ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் இருப்பதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் நெட்ஃபிக்ஸ் உட்பட பல்வேறு ஆப் பயன்பாடுகளை இதில் பயன்படுத்த முடியும். 16ஜிபி மெமரி வசதி, எக்ஸ்1 பிராசஸர், கூகுள் அசிஸ்டெண்ட உள்ளட்ட பல ஆதரவுகளை இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளன. பின்பு சோனி பிராவியா X7400H மாடலின் விலை ரூ.72,999-ஆக உள்ளது.

டிசிஎல்  C715

டிசிஎல் C715

55-இன்ச் QLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ள டிசிஎல் C715 ஸ்மார்ட் டிவி ஆனது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 + ஆதரவு, 30 வாட் ஸ்பீக்கர், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் அவுட், ஆப்டிகல், லேன் போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

ஆடியோவைப் பொறுத்தவரை, டி.டி.எஸ் மற்றும் டால்பி அட்மோஸுடன் 30 வாட் ஸ்பீக்கர்களில் பேக் செய்கிறது. மேலும் ஏஐ தொழில்நுட்ப ஆதரவு, ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிசிஎல் C71 மாடல். பின்பு இந்த 55-இன்ச் டிசிஎல் மாடலின் விலை ரூ.56,999-ஆக உள்ளது.

சியோமி Mi QLED TV

சியோமி Mi QLED TV

Mi QLED TV 4K சாதனம் 55' இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎல்இடி டிஸ்பிளேவுடன் 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. இதில் எச்.எல்.ஜி, எச்.டி.ஆர் 10, எச்.டி.ஆர் 10 பிளஸ் மற்றும் டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு எச்.டி.ஆர் அம்சங்களுக்கான ஆதரவு இந்த டிவியில் உள்ளது. இந்த புதிய டிவி அண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது மற்றும் சமீபத்திய மென்பொருளில் இயங்கும் சில டிவிகளில் இதுவும் ஒன்றாகும். . இந்த டிவியில் வீடியோ தொடர்பான பல்வேறு அம்சங்களுக்காக பேட்ச்வால் 3.5 கொடுக்கப்பட்டுள்ளது. இது மீடியாடெக் எம்டி 9611 குவாட் கோர் சிப்செட் உடன், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. சியோமி அதன் முந்தைய ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு வழங்கிய அதே ரிமோட்டையும் வழங்கியுள்ளது.

இந்த புதிய டிவியில் 30W ஆறு-ஸ்பீக்கர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஸ்பீக்கர்கள் புல் ரேஞ் ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. டிவியில் மூன்று எச்டிஎம்ஐ 2.1 போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளது. டிவியில் புளூடூத் 5.0 அம்சமும் உள்ளது. இந்த புதிய டிவியின் விலை ரூ. 56,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 55-இன்ச் எஸ்எல்இடி 4கே டிவி

ரியல்மி 55-இன்ச் எஸ்எல்இடி 4கே டிவி

ரியல்மி நிறுவனம் தனது அதிநவீன 55-இன்ச் எஸ்எல்இடி 4கே டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. டிவி ரிமோட்டில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட சில ஹாட்-கீகள் உள்ளது. ரிமோட்டில் பிரத்தியேக கூகிள் அசிஸ்டென்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரிமோட்டில் மியூட் பட்டன் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. டிவியை மியூட் செய்ய பயனர்கள் வால்யூம் டவுன் பட்டனை இரண்டு முறை அழுத்துவதன் மூலம் ஆடியோவை முடக்கம் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரியல்மி 55-இன்ச் எஸ்எல்இடி 4கே டிவி மாடலில் என்.டி.எஸ்.சி வண்ண வரம்பு மற்றும் டி.யூ.வி ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் 108 சதவீதம் உள்ளது. SLED இன் NTSC மதிப்பு நிலையான எல்.ஈ.டி மற்றும் சில கியூ.எல்.இ.டி. களை விட சிறந்தது என்று நிறுவனம் கூறுகிறது, இது டிவிக்கு அதிக வண்ணங்களை வழங்க அனுமதிக்கிறது.

ரியல்மி 55-இன்ச் எஸ்எல்இடி டிவி மாடலில் மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதி உடன் கார்டெக்ஸ்-ஏ54சிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும் மாலி-470எம்பி ஜிபியு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2.4GHz மற்றும் 5GHz Wi-Fi, புளூடூத் 5.0, HDMI போர்ட்கள் (ARC உட்பட) மற்றும் USB போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக 24வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோவுடன் வருகிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். இந்த ரியல்மி 55-இன்ச் எஸ்எல்இடி 4கே டிவி மாடலின் விலை ரூ.40,999-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The best 55-inch 4K smart TVs to buy in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X