ரூ.35,000-க்கு கீழ் வாங்கச் சிறந்த அசத்தலான 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.!

|

இந்தியாவில் அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சீன நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துவருகின்றன. அதன்படி ஒன்பிளஸ், சியோமி, ரெட்மி, ரியல்மி போன்ற பல்வேறு ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளன.

வில் சாம்சங், எல்ஜி

இருந்தபோதிலும் இந்தியாவில் சாம்சங், எல்ஜி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் விலை சற்று உயர்வாக இருந்தாலும், விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன. மேலும் இப்போது ரூ.35,000-க்கு கீழ் வாங்கச் சிறந்த அசத்தலான 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி Mi TV 4X 50 inch LED 4K TV

சியோமி Mi TV 4X 50 inch LED 4K TV

சியோமி Mi TV 4X 50 inch LED 4K TV ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவியின் விலை ரூ.34,998-ஆக உள்ளது. குறிப்பாக 3840x2160 பிக்சல்கள், 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குததளம், 4கே எச்டிஆர் 10-பிட் டிஸ்பிளே ஆதரவு, 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

இந்த ஊரடங்கில் Vi டபுள் டேட்டா பேக் தான் நமக்கு சரியானது.. இவ்வளவு டேட்டா இருந்தா ஜமாய்க்கலாமே.!இந்த ஊரடங்கில் Vi டபுள் டேட்டா பேக் தான் நமக்கு சரியானது.. இவ்வளவு டேட்டா இருந்தா ஜமாய்க்கலாமே.!

 தாம்சன்50 OATHPRO 1212 50 inch LED 4K TV

தாம்சன்50 OATHPRO 1212 50 inch LED 4K TV

தாம்சன் 50 OATHPRO 1212 50 inch LED 4K TV ஆனது 3840 x 2160 பிக்சல்கள், 30 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டெண்ட், க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பயன்படுத்த முடியும். அதேபோல் நெட்ஃபிக்ஸ்,பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் இந்ததாம்சன் 50 OATHPRO 1212 50 inch LED 4K TVமாடலின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.

கோடக் 50UHDX7XPRO 50 inch LED 4K TV

கோடக் 50UHDX7XPRO 50 inch LED 4K TV

கோடக் 50UHDX7XPRO 50 inch LED 4K TV மாடலின் விலை ரூ.31,990-ஆக உள்ளது. இந்த அசத்தலான கோடக் ஸ்மார்ட்டிவி 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே மற்றும் 3840 x 2160 பிக்சல்கள் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 24 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

தரமான அம்சங்களுடன் அறிமுகமான OnePlus TV U1S மாடல்கள்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை.!தரமான அம்சங்களுடன் அறிமுகமான OnePlus TV U1S மாடல்கள்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை.!

ஹைசென்ஸ் Hisense 50A71F 50 inch LED 4K TV

ஹைசென்ஸ் Hisense 50A71F 50 inch LED 4K TV

ஹைசென்ஸ் Hisense 50A71F 50 inch LED 4K TV மாடலின் விலை ரூ.34,990-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஹைசென்ஸ் டிவி ஆனது 3840x2160 பிக்சல்கள் மற்றும் 30 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் Android TV 9.0 PIE இயங்குதளம், 3எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

ரெட்மி Smart TV X50 50 inch LED 4K TV

ரெட்மி Smart TV X50 50 inch LED 4K TV

ரெட்மி Smart TV X50 50 inch LED 4K TV மாடலின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 3840 x 2160பிக்சல்கள் மற்றும் 30 வாட் சவுண்ட் அவுட்புட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3 எச்டிஎமஐ போர்ட், 2 யுஎஸ்பிபோர்ட், ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட் டிவி.

தாம்சன்  9R Series LED Smart Android TV  (50PATH1010)

தாம்சன் 9R Series LED Smart Android TV (50PATH1010)

தாம்சன் 9R Series LED Smart Android TV (50PATH1010) ஆனது 3840 x 2160 பிக்சல்கள் மற்றும் 24 வாட்ஸ் சவுண்ட்அவுட்புட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளை ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியம். குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட்கள் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.31,999-ஆக உள்ளது.

Compaq 50-இன்ச் எல்இடி 4கே டிவி

Compaq 50-இன்ச் எல்இடி 4கே டிவி

Compaq CQ50APUD 50 inch LED 4K TV மாடலின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் 3840 x 2160பிக்சல்கள் மற்றும் 24 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் ஆதரவைக் கொண்டுள்ளது. நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் க்ரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

Cooaa  50-இன்ச் எல்இடி 4கே டிவி

Cooaa 50-இன்ச் எல்இடி 4கே டிவி

Cooaa 50S3N 50 inch LED 4K TV மாடலின் விலை ரு.29,999-ஆக உள்ளது. குறிப்பாக நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப்உள்ளிட்ட ஆப் வசதிகளை பயன்படுத்த முடியும். மேலும் 3840 x 2160 பிக்சல்கள் மற்றும் 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

Best Mobiles in India

English summary
The best 50-inch smart TVs to buy for under Rs 35,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X