இந்தியாவில் வாங்கச் சிறந்த 32-இனச் ஸ்மார்ட் டிவிகள்.! முழு விவரம்.!

|

இப்போது வரும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவருகின்றன. குறிப்பாக யூடியூப், ஹாட்ஸ்டார் உட்பட பல்வேறு ஆப் வசதிகளை சில 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியம். மேலும் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்
டிவி மாடல்களுக்கு தான் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

 சாம்சங், தாம்சன், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட

ஆனாலும் சாம்சங், தாம்சன், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளன. மேலும் இப்போது ரூ.15000-க்குள் கிடைக்கும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 தாம்சன் 9A Series 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32PATH0011)

தாம்சன் 9A Series 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32PATH0011)

தாம்சன் 9A Series 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32PATH0011) ஆனது 1366 x 768 பிக்சல்தீர்மானம் மற்றும் 24 வாட் சவுண்ட் அவுட்புட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், க்ரோம்காஸ்ட் வசதி, கூகுள் பிளே ஸ்டோர் வசதி, கூகுள் அசிஸ்டெண்ட் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த 32-இன்ச் தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக ஆண்ட்ராய்டு ஒஎஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த 32-இன்ச் தாம்சன் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,799-ஆக உள்ளது.

'ஃபாஸ்ட் பிளேபேக்' என்ற புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.. நேரத்தை மிச்சப்படுத்துறீங்க ஓகே.. ஆனா.?'ஃபாஸ்ட் பிளேபேக்' என்ற புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.. நேரத்தை மிச்சப்படுத்துறீங்க ஓகே.. ஆனா.?

கோடக் 7XPRO Series 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32HDX7XPRO)

கோடக் 7XPRO Series 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32HDX7XPRO)

கோடக் 7XPRO Series 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32HDX7XPRO) ஆனது 1366 x 768 பிக்சல்கள், 24 வாட் சவுண்ட் அவுட்புட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளம், க்ரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டெண்ட், கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்ட ஆரவுகளை கொண்டுள்ளது இந்த கோடக் 32-இன்ச ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக 1ஜிபி ரேம், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வெளிவந்துள்ள இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த கோடக் 32-இன்ச ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

இன்பினிக்ஸ் X1 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV with Eye Care Technology

இன்பினிக்ஸ் X1 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV with Eye Care Technology

இன்பினிக்ஸ் X1 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV with Eye Care Technology ஆனது சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேசமயம் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் இந்த இன்பினிக்ஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சாதனம் 1366 x 768 பிக்சல்கள், 20 வாட் சவுண்ட் அவுட்புட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த சாதனத்தை ரூ.14,999-விலையில் வாங்க முடியம்.

Compaq  ஸ்மார்ட் டிவி

Compaq ஸ்மார்ட் டிவி

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளCompaq ER Series 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (CQ32APHD)ஆனது ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக 1366 x 768 பிக்சல்கள், 24 வாட் சவுண்ட் அவுட்புட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5ஜிபி ரேம். 8ஜிபி மெமரி, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

மைக்ரோமேக்ஸ்  80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32TA6445HD)

மைக்ரோமேக்ஸ் 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32TA6445HD)

மைக்ரோமேக்ஸ் 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV (32TA6445HD) ஆனது 2எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும்1366x768 பிக்சல்கள், 22 வாட் சவுண்ட் அவுட்புட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற அம்சங்கள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 32-இன்ச் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த சாதனத்தை ரூ.14,999-விலையில்வாங்க முடியும்.

ஹைசென்ஸ் A56E 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV with 9.0 PIE (32A56E)

ஹைசென்ஸ் A56E 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV with 9.0 PIE (32A56E)

ஹைசென்ஸ் A56E 80 cm (32-inch) HD Ready LED Smart Android TV with 9.0 PIE (32A56E) ஆனது சிறந்ததிரை அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம். அதன்படி ஆண்ட்ராய்டு 9 Pie இயங்குதளம், 1366x768 பிக்சல்கள், 20 வாட் சவுண்ட் அவுட்புட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
1ஜிபி ரேம், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது ஹைசென்ஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.14,999- என்று கூறப்படுகிறது.

iFFALCON ஸ்மார்ட் டிவி

iFFALCON ஸ்மார்ட் டிவி

iFFALCON by TCL 79.97 cm (32-inch) HD Ready LED Smart Android TV ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் 10 ஆதரவு, 1366 x 768பிக்சல்கள், 16 வாட் சவுண்ட் அவுட்புட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.

சியோமி Mi 4A PRO 80 cm (32 inch) HD Ready LED Smart Android TV with Google

சியோமி Mi 4A PRO 80 cm (32 inch) HD Ready LED Smart Android TV with Google

இந்த சியோமி டிவி சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பெசல்-லெஸ் டிசைன் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும்1366 x 768 பிகசல்கள், 20 வாட் சவுண்ட் அவுட்புட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த 32-இன்ச் சியோமி டிவி. குறிப்பாக இந்த சாதனத்தை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The best 32-inch smart TVs to buy in India! Full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X