ரூ.20,000க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: இதோ பட்டியல்.!

|

இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. அதேபோல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளன. மேலும் ரூ.20,000க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

 சியோமி எம்ஐ டிவி 4ஏ ப்ரோ

சியோமி எம்ஐ டிவி 4ஏ ப்ரோ

32-இன்ச் எம்ஐ டிவி 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1366×768 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எல்இடி பேனல் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக 64-பிட் குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், PatchWall UI போன்ற ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Dolby+ DTS-HD தொழில்நுட்பத்துடன் 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. அதேபோல் குரோம்காஸ்ட் ஆதரவு, எச்டிஎமஐ, இரண்டு யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த அதிநவீன சியோமி எம்ஐ டிவி 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

ரகசியமா ஒரு இன்ஸ்டா கணக்கு வச்சுருக்கோம்ல., அதில் தான் அது எல்லாமே: இந்தியருக்கு பதிலளித்து மாட்டிய மஸ்க்!ரகசியமா ஒரு இன்ஸ்டா கணக்கு வச்சுருக்கோம்ல., அதில் தான் அது எல்லாமே: இந்தியருக்கு பதிலளித்து மாட்டிய மஸ்க்!

ஒன்பிளஸ் டிவி 32Y1

ஒன்பிளஸ் டிவி 32Y1

ஒன்பிளஸ் டிவி 32Y1 ஸ்மார்ட் டிவிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 32-இன்ச் எச்டி ஸ்கிரீன், 1366×768 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குளம், குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற பல சிறப்பு அமச்ங்களை கொண்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ தொழில்நுட்பத்துடன் 20W உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. அதேபோல் ஆப் ஸ்டோரில் இருந்து Netflix, YouTube மற்றும் பல பயன்பாடுகளைப் பதிவிறக்க டிவி உங்களை அனுமதிக்கிறதுஇந்த ஸ்மார்ட் டிவி. மாலி 470 ஜிபியு ஆதரவு, 1ஜிபி ரேம், புளூடூத், வைஃபை, யுஎஸ்பி போர்ட் போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த அசத்தலான ஒன்பிளஸ் டிவி 32Y1 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ , ரெனோ 8 அறிமுகம்: வெவ்வேறு ரகம், விதவிதமான விலை- ஆரம்ப விலை!ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ , ரெனோ 8 அறிமுகம்: வெவ்வேறு ரகம், விதவிதமான விலை- ஆரம்ப விலை!

 ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி

ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி

ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ஏ-பிளஸ் கிரேடு எச்டி ரெடி டிஸ்பிளே மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1366×768 பிக்சல் தீர்மானம், Dolby Audio, DTS Virtual: X, DTS-HD மற்றும் Dolby Atmos- சான்றளிக்கப்பட்ட அதிவேகமான 20 வாட்ஸ் சக்திவாய்ந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எச்டிஎம் போர்ட்கள், யுஎஸ்பி
போர்ட், 3.5எம்எம் அடியோ ஜாக் போன்ற பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குளம், 1ஜிபி ரேம், குரோம்காஸ்ட் ஆதரவு, 8ஜிபி மெமரி போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.

அடடா., இனி இந்த சேவையுமா- பிளிப்கார்ட்டில் வந்த ஹோமிங் சர்வீஸ்: வீட்டுக்கே வந்து சாதனங்கள் பழுது நீக்கம்!அடடா., இனி இந்த சேவையுமா- பிளிப்கார்ட்டில் வந்த ஹோமிங் சர்வீஸ்: வீட்டுக்கே வந்து சாதனங்கள் பழுது நீக்கம்!

எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி

எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி

எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவியின் விலை ரூ.17,499-ஆக உள்ளது. குறிப்பாக எச்டி ரெடி பேனல், 1366×768 பிக்சல் தீர்மானம், 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், WebOS போன்ற பல சிறப்பு அம்சங்களடன் வெளிவந்துள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி. பின்பு Netflix, Disney+ Hotstar, Amazon Prime மற்றும் பல பயன்பாடுகளுக்கான ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். 10 வாட்ஸ் டவுன்-ஃபைரிங் டூயல் ஸ்பீக்கர்கள் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. அதேபோல் இவற்றில் DTS Virtual:X மற்றும் Dolby Audio ஆதரவும் உள்ளது. யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்.

காத்திருந்து வாங்கலாம்- ஐக்யூ நியோ 6 இந்திய வெளியீடு உறுதி: 64 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12!காத்திருந்து வாங்கலாம்- ஐக்யூ நியோ 6 இந்திய வெளியீடு உறுதி: 64 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12!

 சாம்சங் 32-இன்ச் Wondertainment சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி

சாம்சங் 32-இன்ச் Wondertainment சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி

சாம்சங் 32-இன்ச் Wondertainment சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.17,990-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 1366×768 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவுடன் 20 வாட்ஸ் ஸ்பீக்கர் ஆதரவு, உள்ளமைக்கப்பட்ட அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் பிக்ஸ்பி குரல் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
The best 32-inch smart TVs available for under Rs 20,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X