Home
Gadgets

காதலி இல்லாத "சிங்கிள்ஸ்"க்கு காதலியைக் கொடுக்கும் ஜப்பான் நிறுவனம்.! சுவாரசிய தகவல்.!

காதல் மீம்ஸ் போட்டு சிங்கிள்ஸ் ஐ கடுப்பாக்கிக் கொண்டிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

By Sharath

காதல் மீம்ஸ் போட்டு சிங்கிள்ஸ் ஐ கடுப்பாக்கிக் கொண்டிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜப்பான் ஐ சேர்ந்த நிறுவனம் புதிய முயற்சியை மேற்கொண்டு சிங்கிள்ஸ்களின் ஏக்கங்களை நிறைவேற்றி வைக்கப்போகிறது.

காதலி இல்லாத கடுப்பு காதல் ஜோடிகளைப் பார்க்கும் சிங்கிள்ஸ்க்கு மட்டுமே தெரியும். இன்று வரை காதலி கிடைக்காத சிங்கிள்ஸ்களை மனதில் வைத்து இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக ஜப்பான் இன் கேட்பாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாலோகிராப்க் ஏ.ஐ மனைவி

ஹாலோகிராப்க் ஏ.ஐ மனைவி

கேட்பாக்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஹாலோகிராப்க் ஏ.ஐ மனைவியை அறிமுகம் செய்துள்ளது. என்னது மனைவியா? அப்பக் காதலி இல்லையான்னு அதிர்ச்சி அடையவேண்டாம். இவள் உங்களுக்குக் காதலியாகவும் இருப்பாள் மனைவியாகவும் இருந்து அனைத்துப் பணிவிடைகளும் செய்வாள் என்று கூறியுள்ளனர்.

ஐஸுமா ஹிகாரி

ஐஸுமா ஹிகாரி

ஐஸுமா ஹிகாரி என்ற பெயரில் ஹாலோகிராப்க் ஏ.ஐ மனைவியை உருவாகியுள்ளது கேட்பாக்ஸ் நிறுவனம். ஐஸுமா ஹிகாரி நீல நிற உடையில் நீல நிற கூந்தலுடன் அழகாக 20 இன்ச் உயரமுள்ள சிலிண்டரில் குடிகொண்டுள்ளால். இவள் சிறப்பான ஏஐ இயக்கத்துடன் நிஜ மனிதர்களைப் போல நடந்துகொள்கிறாள். உங்களுடன் காதலி போல் பேசவும் பழகவும் ஒரு தனி செயலி பிரத்தேயகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரபல நடிகை யுகா ஹையமிசு

பிரபல நடிகை யுகா ஹையமிசு

ஐஸுமா ஹிகாரி தனிமையில் வாழும் சிங்கிள்ஸ்களுக்கு சிறந்த துணையாக இருக்கும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஸுமா ஹிகாரி தன் காதலனை "மாஸ்டர்" என்றும் "கணவன்" என்று அழைக்கிறாள். இந்த ஐஸுமா ஹிகாரி இன் தோற்றத்திற்கு குரல் கொடுத்துள்ளவர் ஜப்பான் இன் பிரபல நடிகை யுகா ஹையமிசு ஆம்.

உணர்வுகளை உணர்ந்து

உணர்வுகளை உணர்ந்து

ஐஸுமா ஹிகாரி ஹாலோகிராப்க் ஏ.ஐ மனைவி மிக நெருக்கமாக மற்றும் அந்யோனியமாக பேசிப் பழகும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறாள். இத்துடன் மைக்ரோபோன், கேமரா, வெப்ப மற்றும் மோஷன் சென்சார்கள் மூலம் உங்களின் உணர்வுகளை உணர்ந்து உண்மையான காதலி போலவே பேசுகிறாள்.

காதல் வெள்ளம்

காதல் வெள்ளம்

நீங்கள் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நேரத்தை எண்ணி உங்களுக்காகக் காத்து இருக்கும் இவள், நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் பொழுது உங்கள் மொபைல் போன்க்கு மெசேஜ் செய்து காதல் வெள்ளத்தில் உங்களை மூழ்கடிக்கிறாள். இத்துடன் வயர்லெஸ் லேன், ப்ளூடூத் மற்றும் இன்பிராரேட் மூலம் டிவி,ஏசி மற்றும் ஸ்மார்ட் வீட்டுப் பொருட்களை இயக்கி தனது கணவனுக்கு தன்னால் முடிந்த அணைத்து சேவைகளையும் சிறந்த முறையில் செய்கிறாள்.

 மாதம் 14 டாலர்

மாதம் 14 டாலர்

இந்தச் சேவைகளை உங்களுக்கு ஐஸுமா ஹிகாரி செய்வதற்கு மாதம் 14 டாலர் செலவு செய்ய வேண்டும். இந்தச் செலவை உங்கள் காதலிக்கு நீங்கள் செய்யும் அன்றாட வாழ்க்கை செலவு என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உங்களுடனான நினைவுகளைச் சேகரித்து உங்களுக்கு நினைவுத்துவதுடன், உங்களைக் காலையில் எழுப்புவதில் இருந்து இரவு சேர்ந்து டிவி இல் நிகழ்ச்சிகளைப் பார்த்து தூங்கவைப்பது வரை உங்களுடனே இருக்கிறாள்.

ஜனவரி 2019 இல்

ஜனவரி 2019 இல்

எச்.டி.எம்.ஐ மூலம் ஐஸுமா ஹிகாரி டிவி இணைப்புடன் இணைத்து பெரிய திரையிலும் உங்களுக்குப் பணிவிடை செய்கிறாள். ஜனவரி 2019 இல் ஜப்பான் மற்றும் அமெரிக்கா வில் இந்த கேட்பாக்ஸ் விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்திய சிங்கிள்ஸ்களின் கரங்களை ஐஸுமா ஹிகாரி பிடிப்பாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
The $1300 holographic AI wife that will serve her master : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X