ரூ.1,299-க்கு சும்மா கிழி.. 60 ஹவர்ஸ் பிளேபேக்.. லோவ் லேட்டன்சி.. பட்ஜெட்ல ஏஎன்சி இயர்பட்ஸ்.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமல்லாமல், கேமிங் லோவ் லேட்டன்சி, 60 மணி நேரங்களுக்கு பிளேபேக் ஃபாஸ்ட் சார்ஜிங், குவாட் மைக் போன்ற பீச்சர்களுடன் டெம்ப்ட் கல்ட் ப்ரோ ஏஎன்சி இயர்பட்ஸ் (Tempt Cult Pro ANC Earbuds) களமிறங்கி இருக்கிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் புதுப்புது இயர்பட்ஸ் மாடல்கள் களமிறங்கி வருகின்றன. பிரீமியம் லுக்கில் கிடைப்பதால், பார்த்தாலே வாங்க கூட தோன்றலாம். ஆனால், அதற்கு முன்பாக அதில் இருக்கும் பீச்சர்களை பாரத்துவிட்டு வாங்க வேண்டும். அதேபோலத்தான், இந்த டெம்ப்ட் கல்ட் ப்ரோ ஏஎன்சி இயர்பட்ஸ் மாடலில் கிடைக்கும் பீச்சர்களை முதலில் பார்த்துவிட்டு ஆப்ஷனில் எடுங்கள்.

டெம்ப்ட் கல்ட் ப்ரோ ஏஎன்சி இயர்பட்ஸ் அம்சங்கள் (Tempt Cult Pro ANC Earbuds Specifications): இந்த டெம்ப்ட் மாடலில் 13 எம்எம் டைனாமிக் பேஸ் டிரைவர்கள் (Dynamic Bass Driver) கிடைக்கின்றன. ஆகவே, பேஸ் ஆடியோ விரும்பும் பிரியர்களுக்கு பக்காவான அவுட்புட்டை இது கொடுக்கும். இந்த டிரைவர்களுக்கு டெம்ப்ட் சிக்னேச்சர் சவுண்ட் (TEMPT Signature Sound) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த டெக்னாலஜியானது ஆக்ஸிஅகௌஸ்டிக் (OxyAcoustic) அவுட்புட்டாகும். ஆகவே, பிரத்யேக டியூனிங் எதிர்பார்க்க முடியும். இதுபோக 32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency Mode) கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் இந்த ஆடியோ பீச்சர்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இதில் கிடைக்கிறது.
மேலும், கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி 65ms ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) கிடைக்கிறது. இதுபோக எல்சி3 கோடெக் (LC3 Codec) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டெம்ப்ட் கல்ட் ப்ரோ ஏஎன்சி இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. கூகுள் (Google) மட்டுமல்லாமல், சிரி (Siri Voice Assistant) கொடுக்கப்படுகிறது.
பேட்டரி பேக்கப்பில் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், சார்ஜிங் கேஸ் மூலம் 60 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இயர்பட்கள் மற்றும் சார்ஜிங் கேஸ் மூலமாக ஸ்டாண்ட்பை மோடில் 120 மணி நேங்களுக்கு பேக்கப் கிடைக்கும். மேலும், ஏஎன்சி மோடில் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இயர்பட்களில் 35mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சார்ஜிங் கேஸில் 300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த டெம்ப்ட் கல்ட் ப்ரோ ஏஎன்சி இயர்பட்ஸ் மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 75 நிமிடங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். அதேபோல ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள 1 மணி நேரம் 30 நிமிடங்கள் பிடிக்கும். வாய்ஸ் கால்களுக்காக குவாட் மைக் சிஸ்டம் (Quad Mic System) கிடைக்கிறது.
ஆகவே, வாய்ஸ் கிளாரிட்டி மற்றும் பேக்கிரவுண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் கிடைக்கும். IPX5 ரேட்டிங் கொண்ட ஸ்வெட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Sweat & Splash Resistance) கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் பேட்டரி இன்டிகேஷனுக்கான எல்இடி இன்டிகேட்டர் (LED Indicator) கிடைக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி கலர் மற்றும் டிசைன் இருக்கிறது.
இந்த டெம்ப்ட் கல்ட் ப்ரோ ஏஎன்சி இயர்பட்ஸ் மாடலில் மெட்டாலிக் லுக் கிடைக்கும்படி கிளாசிக் பிளாக் (Classic Black) மற்றும் டைனாமிக் ப்ளூ (Dynamic Blue) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. இந்த பீச்சர்களுடன் ரூ.1,299 மட்டுமே விலை வருகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் பீச்சர்கள் இந்த மாடலில் இருந்தால், ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








