சாதா ஸ்மார்ட் TV இனி சரவுண்ட் TV.. ரூ.1699 க்கு 24W வயர்லெஸ் சினி பார்.. 8 மணிநேர 4000mAh பேட்டரி!
உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவியின் சவுண்ட் "மொக்கையாக" உள்ளதா? சூப்பரான பேக்கிரவுண்ட் சவுண்ட் கொண்ட திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும், பாடல்களையும் சுமாரான அவுட்புட்டில் வழங்குகிறதா? இந்த சிக்கலை சூப்பர் பட்ஜெட் செலவில் சரி செய்ய விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கவலையை விடுங்கள். சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
டெம்ப்ட் (TEMPT) நிறுவனம் ஆனது இந்திய சந்தையில் அதன் லேட்டஸ்ட் சவுண்ட் பார் ஆன சினி பார் 24W போர்ட்டபிள் வயர்லெஸ் ஆர்ஜிபி சவுண்ட்பார் (TEMPT CineBar 24W portable wireless RGB soundbar) மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் டெம்ப்ட் நிறுவனமானது அதன் ஆடியோ வரிசையை விரிவுபடுத்தி உள்ளது.

டெம்ப்ட் நிறுவனத்தின் இந்த புதிய சவுண்ட் பார் மாடல் ஆனது ஸ்மார்ட் டிவிகளில் (Smart TV) மட்டுமின்றி லேப்டாப்கள் (Laptop), ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மற்றும் கேமிங் சிஸ்டம்களில் (Gaming System) கூட அதிக இடத்தை எடுத்துக் கொள்ளாமல் செயல்படும் ஒரு சிறிய சவுண்ட்பாரை தேடும் பயனர்களை இலக்காக கொண்டுள்ளது.
இந்த சினி பார் மாடல் ஆனது ஒரு "க்ளீன்" ஆன செவ்வக வடிவத்துடன் ஒரு சிறிய கட்டமைப்பை கொண்டுள்ளது. ஒரு ஆர்ஜிபி லைட் ஸ்ட்ரிப் (RGB light strip) ஆனது முன் பேனலில் இயங்குகிறது, இந்த யூனிட் பயன்பாட்டில் இருக்கும்போது ஒரு விஷூவல் எலிமெண்ட்டை (Visual element) சேர்க்கிறது.
ஒட்டுமொத்தமாக இதன் வடிவமைப்பு மிகவும் எளிமையாக உள்ளது ஆகையால் இதை மேசை அமைப்புகள், சிறிய அறைகள் அல்லது போர்ட்டபிள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். இது வெவ்வேறு டிவைஸ்களில் திரைப்படங்கள், இசை மற்றும் விளையாட்டுகளை கையாளக்கூடிய வயர்டு மற்றும் வயர்லெஸ் சவுண்ட்பாராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆடியோ ஹார்ட்வேர்-ஐ பொறுத்தவரை, இந்த சினி பார் மாடல் ஆனது 24W ஆம்ப்ளிஃபையர் () மூலம் இயக்கப்படுகிறது. இது டூயல் ஹெவி-பாஸ் ரேடியேட்டர்களுடன் டூயல் 52 மிமீ ட்ரைவர்களை பயன்படுத்துகிறது. வாய்ஸ்களை தெளிவாக வைத்திருக்கும் அதே வேளையில் குறைந்த அதிர்வெண் வெளியீட்டில் கவனம் செலுத்தி சத்தமான ஒலியை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை டெம்ப்ட் சினி பார் 24W போர்ட்டபிள் வயர்லெஸ் ஆர்ஜிபி சவுண்ட்பார் ஆனது 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. டெம்ப்ட் நிறுவனத்தின் கூற்றுப்படு இத்தி ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்கும். டைப்-சி போர்ட் மூலம் சார்ஜ் செய்யப்படும், மேலும் இதன் பேட்டரி 3 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இதன் வயர்லெஸ் கனெக்டிவிட்டி ஆனது ப்ளூடூத் வி5.4 வழியாக நடக்கிறது. டெம்ப்ட் நிறுவனத்தின்படி இது 15 மீட்டர் வரை வயர்லெஸ் வரம்பை வழங்கும். மேலும் இந்த சினி பார் மாடல் ஆனது TWS-ஐயும் ஆதரிக்கிறது, இதன் கீழ் ஸ்டீரியோ சவுண்ட் வெளியீட்டிற்காக இரண்டு சினி பார் யூனிட்களை ஒன்றாக இணைக்க முடியும்.
வயர்டு அல்லது ஆஃப்லைன் பிளேபேக்கை விரும்பும் பயனர்களுக்கு, சினி பார் மடலில் பல இன்புட் விருப்பங்கள் உள்ளன. இவற்றில் யுஎஸ்பி (USB), டிஎப் (TF) கார்டு மற்றும் ஆக்ஸ் (AUX) இன்புட் ஆதரவு ஆகியவைகளும் அடங்கும். இது கூடுதல் அக்ஸசெரீஸ் இல்லாமல் பரந்த அளவிலான சோர்ஸ் டிவைஸ்களுடன் இணக்கமாக வைத்திருக்க அனுமதிக்கும்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்: டெம்ப்ட் சினி பார் 24W போர்ட்டபிள் வயர்லெஸ் ஆர்ஜிபி சவுண்ட்பார் ஆனது ரூ.1,699 என்கிற விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது இது டெம்ப்ட்இந்தியா.காம் (TemptIndia.com) மற்றும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon.in) மூலம் வாங்க கிடைக்கிறது.
டெம்ப்ட் சினி பார் 24W போர்ட்டபிள் வயர்லெஸ் ஆர்ஜிபி சவுண்ட்பார் ஆனது வெளிப்புற ஸ்பீக்கர்கள் இல்லாமல் திரைப்படங்களை பார்ப்பது, நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் செய்வது, கேம்களை விளையாடுவது மற்றும் இசையைக் கேட்பதை விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற விருப்பம் ஆகும்.


Click it and Unblock the Notifications








