வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் துணிகள்.! நீங்க சூட இருந்தா கூல் ஆக்கும்.!

|

உலகின் வெப்பநிலை மற்றும் பருவகால நிலையில் அதிகம் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் பலரும் இதற்கு விடை தேடி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவின் மேரிலாந்தின் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று வெப்பத்தைக் கட்டுப்படுத்த கூடிய துணியை உருவாக்கியுள்ளது.

அதிநவீன ஸ்மார்ட் துணி

அதிநவீன ஸ்மார்ட் துணி

விஞ்ஞானிகள் வெப்பத்தையும் குளிரையும் கட்டுப்படுத்தும் அதிநவீன ஸ்மார்ட் துணியை உருவாக்கியுள்ளனர். இந்தத் துணியை நீங்கள் அணியும் பொழுது, உங்களின் உடலிற்கு ஏற்றார் போல் தன் நிலையை மாற்றிக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

 கண்டெக்ட்டிங் உலோம்

கண்டெக்ட்டிங் உலோம்

வெப்பநிலையைச் சமாளிக்க விஞ்ஞானிகள் நூல் துணியுடன் கண்டெக்ட்டிங் உலோகத்தைச் சேர்ந்து இந்த ஸ்மார்ட் துணியை உருவாக்கியுள்ளனர். பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த துணிகள் வெப்பநிலைக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ளும் வல்லமை கொண்டுள்ளது.

கேட்டிங்

கேட்டிங்

இந்த ஸ்மார்ட் துணிகள் சூரியனின் கதிர்வீச்சை தடுக்கும் விதத்தில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. சூடான மற்றும் ஈரப்பதமான நிலையில் துணிகள் சுருங்கியும் விருந்தும் கதிர் வீச்சுகளைத் தடுக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை செயல்பாட்டிற்கு விஞ்ஞானிகள் கேட்டிங் என்று பெயரிட்டுள்ளனர்.

 கார்பன் நானோடுயூப்

கார்பன் நானோடுயூப்

துணியில் உள்ள போக்குகள் அனைத்தும் கார்பனினால் ஆனா கார்பன் நானோடுயூப் கண்டெக்ட்டிங் உலோகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. உடலில் உருவாகும் வியர்வையை உரிந்துகொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வியர்வையைக் கட்டுப்படுத்த காத்துப் புகும்படி தானாகவே விரிந்து செயல்பட கூடிய வல்லமை கொண்டுள்ளது.

விரைவில் விற்பனை

விரைவில் விற்பனை

சூடான நேரத்தில் பயனர் சூட்டை உணரும் முன்பே, இந்த ஆடைகள் அவர்களின் உடல் வெப்பத்தை அறிந்து அதற்கு ஏற்ப தங்களை வேகமா மாற்றி கொள்கின்றது. பயனர்கள் வெப்பத்தை உணர்வதற்கு முன்பே சிறந்து செயல்படும் விதத்தில் இந்த ஸ்மார்ட் துணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் விற்பனைக்குக் கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Temperature regulated smart clothes that keeps you cool : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X