ரூ.20,990-விலையில் அட்டகாசமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

|

ஜெர்மன் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பிராண்ட் எனக் கூறப்படும் டெலிஃபங்கன் (Telefunken) நிறுவனம் இந்தியாவில் தனது 39-இன்ச்(TFK39HDS) மற்றும் 43-இன்ச் (TFK43QFS) ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சற்று குறைவான விலையில் வெளிவந்துள்ளது.

 டெலிஃபங்கன் நிறுவனம்

டெலிஃபங்கன் நிறுவனம்

குறிப்பாக டெலிஃபங்கன் நிறுவனம் அறிமுகம் செய்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஒரு வருட உத்தரவாதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஃப்லைன் கடைகளில் இந்த ஸ்மார்ட் டிவிகள் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.

 1920 x 1080 பிக்சல்

1920 x 1080 பிக்சல்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 39-இன்ச் டெலிஃபங்கன் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி டிஸ்பிளே மற்றும்1366 x 768 பிக்சல்திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 43-இன்ச் டிவி மாடல் ஆனதுமுழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

அசத்தலான மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!அசத்தலான மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

 ஏ-பிளஸ் கிரேடு பேனலுடன் வெளிவந்துள்ளது

ஏ-பிளஸ் கிரேடு பேனலுடன் வெளிவந்துள்ளது

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் ஏ-பிளஸ் கிரேடு பேனலுடன் வெளிவந்துள்ளது, பின்பு பிரைட்நஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் நிலைகளை மேம்படுத்துவதற்காக குவாண்ட் லுமினட் தொழலிநுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது

கிரிக்கெட் பிக்சர் மோட்

கிரிக்கெட் பிக்சர் மோட்

டெலிஃபங்கன் அறிமுகம் செய்த இந்த ஸ்மார்ட் டிவிகளில் கிரிக்கெட் பிக்சர் மோட் எனும் வசதி இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இந்த பயன்பாடு கிரிக்கெட் பார்க்கும் ஆனபத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது, சுருக்கமாக கூறவேண்டு என்றால், கிர்க்கெட் பந்து கூட துல்லியமாக காட்டும் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள்.

சினிமா மோட்

சினிமா மோட்

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளிலும் சினிமா மோட் கூட உள்ளது, இதுவும் சிறந்த பார்வை அனுபவத்தை மேம்படுத்தும். பின்பு இந்த டிவிகளில் புளூடூத் வசதி இடம்பெற்றுள்ளதால் வெளிப்புற ஆடியோ சாதனங்களுடனும் இணைக்க முடியும்.

Eshare ஆப் வசதி

Eshare ஆப் வசதி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட டெலிஃபங்கன் ஸ்மார்ட் டிவிகளில் Eshare ஆப் வசதி உள்ளதால், கோப்புகள், வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பகிரமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளில் 3எச்.டி.எம்.ஐ போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் 1 ஆப்டிகல் அவுட்புட் போன்ற வசதிகள் உள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0

ஆண்ட்ராய்டு 8.0

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் குவாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகின்றன, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளில் 'ஸ்ட்ரீம்வால் யுஐ'யில் உள்ளடக்க டிஸ்கவரி எஞ்சின் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது.

ஹாட்ஸ்டார், ஜீ 5

ஹாட்ஸ்டார், ஜீ 5

இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஹாட்ஸ்டார், ஜீ 5 போன்ற முன்பே நிறுவப்பட்ட ஆப் பயன்பாடுகளுடன் வெளிவந்துள்ளன, மேலும்நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற கூடுதல் ஆப் பயன்பாடுகளை ஆதரிக்கிறது.

39-இன்ச்(TFK39HDS) ஸ்மார்ட் டிவி விலை

டெலிஃபங்கன் நிறுவனத்தின் 39-இன்ச்(TFK39HDS) ஸ்மார்ட் டிவி விலை ரூ.17,990-ஆக உள்ளது.
டெலிஃபங்கன் நிறுவனத்தின் 43-இன்ச்(TFK43QFS) ஸ்மார்ட் டிவி விலை ரூ.20,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Telefunken introduces new range of Bluetooth HD and FHD Smart LED TVs in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X