ரூ.16,999-விலையில் 40-இன்ச் புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
ஜெர்மன் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பிராண்ட் எனக் கூறப்படும் டெலிஃபங்கன் (Telefunken) நிறுவனம் இந்தியாவில் தனது புதிய 40-இன்ச் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மாடல் எண் TFK40S
குறிப்பாக Telefunken நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்தஸ்மார்ட் டிவியின் மாடல் எண் TFK40S என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

1920x1080 பிக்சல்
Telefunken நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த டிவி சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 8.0
மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதி இவற்றுள் அடக்கம். பின்பு ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு சுலபமாக இருக்கும்.

8ஜிபி மெமரி
Telefunken நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாறிவரும் இந்திய வானிலை நிலைமைகளுடன் பொருந்தக்கூடிய வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20W பில்ட்-இன் பாக்ஸ் ஸ்பீக்கர்
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி குவாண்டம் லுமினிட் டெக்னாலஜி மற்றும் கிரிக்கெட் பிக்சர் பயன்முறையுடன் வருகிறது. மேலும் இந்த டிவியில் 20W பில்ட்-இன் பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் 5 சரவுண்ட் ஒலி முறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ஸ்டார், ஜீ5
கிளவுட் டிவி சான்றளிக்கப்பட்ட ஏஓஎஸ்பி, ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட், Alt பாலாஜி, ஜியோ சினிமா உள்ளிட்டபல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் மூவி பாக்ஸின் இலவச சந்தாவை வழங்குகிறது இந்த ஸ்மார்ட் டிவி.

இணைப்பு ஆதரவுகள்
40-இன்ச் Telefunken ஸ்மார்ட் டிவியில் 2எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ ஏ.ஆர்.சி, 1 ஆப்டிகல் அவுட்புட், ஈதர்நெட் போன்ற பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications