Home
Gadgets

100 இன்ச் கதை முடிந்தது.. வெறும் ரூ.6,499-க்கு 200 இன்ச்.. 4K புரொஜெக்டர்.. 8GB மெமரி.. 1GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 100 இன்ச், 120 இன்ச் புரொஜெக்டர் மாடல்களை தூக்கி சாப்பிடும்படியான அடிமட்ட விலைக்கு 200 இன்ச் புரொஜெக்சனுடன் டெக்சோக்ஸ் ரெவோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் (TecSox REVO Android Smart Projector) களமிறங்கி இருக்கிறது. 4K அல்ட்ரா எச்டி சப்போர்ட், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி போன்ற மற்ற பீச்சர்களையும் தரமாக கொடுத்திருக்கிறது. இந்த டெக்சோக்ஸ் ரெவோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலின் முழு விவரங்கள் இதோ.

இப்போது, அடிமட்ட விலைக்குகூட ஆண்ட்ராய்டு புரொஜெக்டர்கள் கிடைக்கின்றன. இதுபோன்ற விலைக்கு கிடைக்கும் மாடல்களில் டிவிகளில் கிடைக்கும் அவுட்புட் வராது என்றாலும், மினி தியேட்டர் போன்ற பெரிய ஸ்கிரீன் அவுட்புட்டை நிச்சயம் கொடுக்கும். இதானாலேயே, அதுபோன்ற பட்ஜெட் விலை புரொஜெக்டர்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது.

100 இன்ச் கதை முடிந்தது.. வெறும் ரூ.6,499-க்கு 200 இன்ச்.. எந்த மாடல்?

இதில் டெக்சோக்ஸ் நிறுவனம் பட்டையை கிளப்பி வருகிறது. ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் பல்வேறு மாடல்களை அடுத்தடுத்து களமிறக்கி வருகிறது. இப்போது, வெறும் ரூ.6,499 பட்ஜெட்டில் 200 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கும்படி இந்த டெக்சோக்ஸ் ரெவோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலை கொண்டுவந்துள்ளது. இதன் பீச்சர்கள் எப்படி என்பதை பார்ப்போம்.

இதுவொரு காம்பாக்ட் டிசைன் கொண்ட அவுட்டோர் மாடலாகும். ஆகவே, இதை வீட்டில் மட்டுமல்லாமல், வெளியிலும் கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ளலாம். கிட்டத்தட்ட கை பையில் போட்டு எடுத்து செல்லும்படியான பாடி கிடைக்கிறது. இது டிராவலர்களுக்கு பக்காவாக இருக்கும். பெரிய வெயிட் இல்லாமல் எடுத்து சென்று பயன்படுத்தலாம். ரேட்டேட்டபிள் செய்யலாம்.

டெக்சோக்ஸ் ரெவோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் அம்சங்கள் (TecSox REVO Android Smart Projector Specifications): இந்த ஆண்ட்ராய்டு புரொஜெக்டரில் 1080p ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 4K அல்ட்ரா எச்டி சப்போர்ட் கிடைக்கிறது. 11,000 லூமென்சென்ஸ் வருகிறது. அவுட்டோருக்கு ஏற்ப எலக்ட்ரிக் போகஸ் (Electric Focus) கொடுக்கிறது. ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கிடைக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போனுடனான கனெக்டிவிட்டி எளிதாக இருக்கும். இந்த ரெவோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டரில் 1 ஜிபி ரேம் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில் வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) ஆகிய வயர்லெஸ் சப்போர்ட் உள்ளது.

மேலும், யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), ஆடியோ ஜாக் (Audio Jack) போன்ற கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது. இந்த டெக்சோக்ஸ் ரெவோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைவ் கிடைக்கும். ஆகவே, இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதைவிட அதிக டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த டெக்சோக்ஸ் ரெவோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டரின் மார்கெட் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் ரூ.6,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. டெக்சோக்ஸ் தளம் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

டிராவல் செய்யும்போது வீடியோக்கள், போட்டோக்கள் போன்றவற்றை அவுட்டோரில் பார்க்க விரும்பும் பிரியர்களுக்கு இதுபோன்ற காம்பாக்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் பக்கா ஆப்ஷனாக இருக்கும். கம்மியான விலையில் கிடைப்பதால், அதற்கு ஏற்பவே அவுட்புட் இருக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TecSox REVO Android Smart Projector With 1GB RAM Under Rs 7000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X