வீடு தியேட்டர் மாதிரி மிரளும்.. 150 இன்ச்.. ரூ.15,000 போதும்.. 4D கீஸ்டோன் கரெக்சன்.. 1GB ரேம்.. எந்த மாடல்?
வீட்டையே தியேட்டர் மாதிரி மாற்றும்படியான ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை பட்ஜெட்டில் கொடுத்து வருகிறது டெக்சோக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் டெக்சோக்ஸ் ஸ்மார்ட் பிரைம் ப்ரொஜெக்டர் (TecSox Prime Smart Projector) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ப்ரொஜெக்டரின் விலை எப்படி?
ரூ.10,000 பட்ஜெட்டில் 150 இன்ச் ப்ரொஜெக்சன் கொடுப்பது மட்டுமல்லாமல், 180 டிகிரி ரோட்டேட்டபிள் டிசைனை (180 Degree Rotatable Design) இந்த டெக்சோக்ஸ் ஸ்மார்ட் பிரைம் ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு ஓஎஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

டெக்சோக்ஸ் பிரைம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (TecSox Prime Smart Projector Specifications): 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த டெக்சோக்ஸ் பிரைம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. 30 இன்ச் முதல் 150 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே, ஹோம் தியேட்டரி அனுபவத்தை இதில் பெற்று கொள்ளலாம்.
1280 x 720 பிக்சல்கள் எச்டி ரெசொலுஷன் (HD Resolution) கொடுத்துள்ளது. ஆகவே, வீடியோ குவாலிட்டி இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கும். மேலும், 2.1 இன்ச் எல்சிடி பேனல் கொடுக்கப்பட்டு உள்ளது.
200 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் பிரைட்னஸ் (ANSI Lumens Brightness) கொடுக்கும் மாடலாக இந்த டெக்சோக்ஸ் பிரைம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.
கிளாஸ் லென்ஸ் (Glass Lens), மேனுவல் போகஸ் (Manual Focus) மற்றும் ஆட்டோ வெர்டிகல் கரெக்சன் கரெக்சன் (Auto Vertical Correction) கிடைக்கிறது. மேலும், 4டி கீஸ்டோன் கரெக்சன் (4D Keystone Correction) கொடுக்கப்பட்டுள்ளது. 30 இன்ச் ப்ரொஜெக்சன் செய்ய 0.8 மீட்டர் இடைவெளி இருந்தால் போதும். 150 இன்ச் ப்ரொஜெக்சன் செய்ய 4 மீட்டர்கள் இடைவெளி வேண்டும்.
எச்ஐ252 ப்ராசஸர் (Hi252 Processor) கொண்ட மாடலாக இந்த டெக்சோக்ஸ் பிரைம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. 4K டீகோட்டிங் (4K Decoding) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடிகள் வருகின்றன.
30,000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைவ் கொண்ட மாடலாக இந்த டெக்சோக்ஸ் பிரைம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. 40W பவர் அவுட்புட் கிடைக்கிறது. நேட்டிவ் எச்டி 720p (Native HD 720p) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 4K டீகோடிங் சப்போர்ட் கிடைப்பதால், வீடியோ குவாலிட்டி பக்காவாக இருக்கும். ஆண்ட்ராய்டு 12.0 (Android 12.0) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
டூயல் பேண்ட் வை-பை 6 (Dual Band Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், எச்டிஎம்ஐ (HDMI), யூஎஸ்பி (USB) மற்றும் ஆடியோ அவுட் (Audio Out) போர்ட்களையும் இந்த டெக்சோக்ஸ் பிரைம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களில் ஸ்கிரீன் மிரரிங் ( Screen Mirroring) செய்து கொள்ளலாம்.
பில்ட்-இன் 2W ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டு உள்ளது. 6 மாதங்களுக்கு வாரண்டியுடன் இந்த டெக்சோக்ஸ் பிரைம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. இவ்வளவு பீச்சர்களுடன் ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. டெக்சோக்ஸ் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஒயிட் (White) கலரில் மட்டுமே இந்த டெக்சோக்ஸ் பிரைம் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications