Home
Gadgets

மூக்குல விரல் வச்சுருவீங்க.. ரூ.599 போதும்.. 10 நிமிட சார்ஜில் 150 நிமிட பிளேபேக்.. 50எம்எஸ் லோவ் லேட்டன்சி!

இந்திய மார்கெட்டில் லோவ் லேட்டன்சி கொண்ட ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடல்களில் இவ்வளவு மலிவான விலைக்கும் மாடல்கள் கிடைக்குமா? என்று மூக்கில் விரல் வைக்கும்படி 50எம்எஸ் லோவ் லேட்டன்சி உடன் டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் (TecSox Moon Earbuds) மாடல் களமிறங்கி இருக்கிறது. இந்த டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மலிவான விலைக்கு இயர்பட்ஸ் மாடல்களை கொடுப்பதில் டெக்சாக்ஸ் நிறுவனமானது, தனியிடம் பிடித்து வருகிறது. ரூ.1,000 பட்ஜெட்டுக்குள் அடுத்தடுத்து மாடல்கள் களமிறக்கி வருகிறது. இப்போது, வீகன் லெதர் லுக் கொடுக்கும்படி டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் முதல் லோவ் லேட்டன்சி வரையில் பீச்சர்கள் உள்ளன.

மூக்குல விரல் வச்சுருவீங்க.. ரூ.599 போதும்.. 10 நிமிட சார்ஜில்!

டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் அம்சங்கள் (TecSox Moon Earbuds Specifications): 10 எம்எம் டைனாமிக் டிரைவர்களை இந்த டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் கொடுக்கிறது. ப்ளூடூத் மியூசிக் மற்றும் காலிங் கொடுக்க ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிவை கொடுத்து இருக்கிறது. ஒன்-டச் ஆக்டிவேட் (One-touch Activate) சப்போர்ட் கொடுத்துள்ளது.

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற டிவைஸ்களில் உடனடியாக கனெக்ட் செய்து கொள்ளும்படி இன்ஸ்டன்ட் பேரிங் (Instant Pairing) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கேமிங் பிரியர்கள் விரும்பும் லோவ் லேட்டன்சி பெரும்பாலும் கிடைக்காது. ஆனால், இந்த டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் மாடலில் 50 எம்எஸ் லோவ்-லேட்டன் மோட் (Low-latency Mode) கிடைக்கிறது.

ஆகவே, ஆடியோ மற்றும் வீடியோ சிங்க் பக்காவாக இருக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் இருக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 150 நிமிடங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். மேலும், ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால், 30 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

IPX4 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட்டை இந்த டெக்சாக்ஸ் மூன் ப்ளூடூத் இயர்பட்ஸ் கொடுத்துள்ளது. இது ஃபுல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்காது. ஸ்வெட் மற்றும் லைட் ஸ்பிளாஷஸ் (Sweat & Light Splashes) மட்டுமே கொடுக்கும். கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை கொடுக்கும்படி பில்ட்-இன் மைக்ரோபோன் (Built-in Microphone) கொடுக்கப்பட்டு உள்ளது.

குயிக் பேரிங் (Quick Pairing) சப்போர்ட் கொடுத்துள்ளது. டீப் பேஸ் (Deep Bass) ஆடியோவை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகவும் இருக்கிறது. சார்ஜிங் கேஸ் லைட் வெயிட்டில் இருக்கிறது. அதேபோல எர்கோனாமிக் டிசைனில் (Ergonomic Design) பிரீமியம் லுக்கை கொடுக்கிறது. சார்ஜிங் இன்டிகேட்டரையும் இந்த டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் கொடுக்கிறது.

டெக்சாக்ஸ் மூன் இயர்பட்ஸ் விலை (TecSox Moon Earbuds Price): இவ்வளவு பீச்சர்களுடன் வெறும் ரூ.599 விலைக்கு கிடைக்கிறது. இவ்வளவு மலிவான விலைக்கு கிடைப்பதால், இது அறிமுக சலுகையாக இருக்கலாம். ஆகவே, விலையில் மாற்றம் ஏற்படலாம். அதேபோல மலிவான விலைக்கு கிடைக்கும் மாடல்களுக்கு பெரிதாக வாரண்டி கிடைக்காது.

இருப்பினும், இந்த மாடலை 6 மாதங்கள் வாரண்டியுடன் வாங்கி கொள்ள முடிகிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் இந்த டெக்சாக்ஸ் மூன் ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். டெக்சாக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மற்ற ஆன்லைன் தளங்களில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
TecSox Moon Earbuds With 30 Hours Total Playback Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X